பக்கம்:பிறந்த மண்.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்த்சாரதி 249

வைத்து விட்டுப்போனதெல்லாம் கடன்கள்தான்.ஆனாலும், ! எனக்கு ஒரு புதிய நம்பிக்கை உண்டாகியிருக்கிறது.என்னால் உழைக்க முடியும். எனக்கு வலிமை வாய்ந்த இரண்டு கை களும், ஒர் உள்ளமும் இருக்கின்றன. அறிவையும், படிப் பையும் நம்பிப் பிழைக்க விரும்பிய விருப்பம் இன்றோடு என் மன்த்தை விட்டு நீங்கிவிட்டது.நான் கைகளால் உழைக்கப் போகிறேன். என்னைப் பெற்றெடுத்த பூமியின்மேல் இரத் தத்தையும், வியர்வையையும் சிந்திப் பாடுபடப் போகிறேன். அதில் எனக்கு வெற்றி கிடைத்தால் எனது நம்பிக்கை, எனது புதியவழி எல்லாமே வெற்றிபெறும்.நான்தோற்றால் என்னுடைய பரிசுத்தமான புனிதமான நல்ல ஆத்மாவை நான் பிறந்த மண்ணுக்குச் சமர்ப்பிப்பேன்."

அழகியநம்பியின் பேச்சைக்கேட்டு அப்படியே மலைத்துப் போனார் வோட்ஹவுஸ் - . .

"இந்த எண்ணம் உங்களுக்கு முதல் முதலாக எப்போது ஏற்பட்டது என்பதை நான் அறிந்து கொள்ளலாமோ?"

  • பிரமநாயகத்தைப் போன்ற வியாபாரிகள் பணம் சேர்ப்பதற்காகச் செய்யும் சூழ்ச்சிகளைப் பார்த்து என் உள்ளம் குமுறிற்று. நேர்மைக் குறைபாடும் வஞ்சக மனமும் உள்ள பூர்ணாவைப் போன்றவர்கள்தாம் உத்தியோக வாழ்வில் வெற்றி பெறமுடியும் என்று அறிந்தபோது என் அறிவையும் படிப்பையும் எண்ணி நான்ே வெட்கப்பட்டேன். உங்கள் அழகான இலங்கையின் அருமையான மலைகளில் தேயிலைத் தோட்டங்களிலே, ரப்பர்த் தோட்டங்களிலே உழைத்து வாழும் ஆயிரமாயிரம் தமிழ்க் கூலிகளைப் பார்த்தபோது அவர்கள் அதிகமாக உழைத்துவிட்டுக் குறைந்த ஊதியமும், குறைந்த வசதிகளும் பெற்று வாழ்வ

தைப் பார்த்தபோது என்உள்ளங் கொதித்தது. அந்த மலை . களின் பொன் கொழிக்கும் செல்வங்களைப் பார்த்தபோது நான் கவிபாட நினைக்கவில்லை, கற்பனைகளில் இலயிக்க வில்லை. கனவுகள் காணவில்லை. உழைத்த-உழைக்கிறஉமைக்க கெக்கம் கைகளின் சக்தியை எண்ணி வியக்கேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/251&oldid=597774" இலிருந்து மீள்விக்கப்பட்டது