பக்கம்:பிறந்த மண்.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 - - பிறந்த மண்

அந்த விநாடியிலிருந்து என் மனம் மட்டும் மாறவில்லைஎனக்காக நான் வகுத்துக் கொண்டிருந்த லட்சி: மே மாறிப் போய்விட்டது. பிரமநாயகத்தின் கடையில் இந்த முறிவுக ளெல்லாம் ஏற்படாமல் ஒழுங்காக இருந்திருந்தால்கூட நான் இங்கே வேலை பார்க்கமாட்டேன். இன்று கப்பல் ஏறுவது போல் இன்னும் நாலுநாள் கழித்துக் கப்பலேறியிருப்பேன்." சொற்பொழிவு போன்ற அவனுடைய நீண்ட பேச்சைக் கேட்டுப் பெருமூச்சு விட்டார் வோட் ஹவுஸ், அழகியநம்பி தானா இப்படிப் பேசுகிறான்!-என்று வியத்துபோய் அவன் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தார் சபாரத்தினம்.

அப்போது கப்பல் புறப்படுவதற்கு அடைய்ாளமான முதல் ஒலி முழக்கம் எழுந்தது. கூவிகள் சாமான்களைத் தூக்கிக்கொண்டுபோய் அவன் உட்காரவேண்டிய் இடத்தின் பக்கத்தில் மேல் தட்டில் வைத்தார்கள்.

இரண்டாவது ஒலியும் முழங்கியது. அழகியநம்பி கப்பலில் ஏறி மேல் தட்டின் கிராதியைப் பிடித்துக்கொண்டு நின்றான். மூன்றாவது ஒலி முழங்கிக் கொண்டிருக்கும். போதே கப்பல் நகர்ந்தது. அவன் கீழே நின்று கொண்டிருந் தவர்களை நோக்கிக் கை கூப்பினான். எப்போதாவது தமிழ் நாட்டிற்கு வந்தால் குறிஞ்சியூருக்கு வாருங்கள்அவன் சொல்லிய இந்தச் சொற்கள் கப்பல் புறப்படும்போது ஏற்பட்ட பலவகை ஒலிக் குழப்பத்தில் அவர்கள் செவி வரையில் எட்டினவோ, இல்லையோ? -

21. பிறந்த மண்ணை நோக்கி.

துறைமுகம் கண்ணுக்கு மறைகிறவரை மேல்தட்டின் கிராதியைப் பிடித்துக்கொண்டு நின்றான் அழகிய நம்பி. துறைமுகத்தில் சபாரத்தினம், மேரி, லில்லி, வோட்ஹவுஸ் த்ம்பதி-ஆகியோர் விடைகொடுக்கும் பாவனையில் அவனை நோக்கித் தங்கள் கைகளை ஆட்டிக் கொண்டிருந்தனர். அவனும் தன் வலக் கையை உயர்த்தி ஆட்டினான். புதிதாக'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/252&oldid=597776" இலிருந்து மீள்விக்கப்பட்டது