பக்கம்:பிறந்த மண்.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி - . 25i

அவன் விரல்களில் ஏறியிருந்த மோதிரங்கள் மின்னின. எதிர் வெயிலில் கண்கள் கூசிப் பார்வையை மறைத்து மங்கச் செய்தது. கப்பலின் போக்கில் துரிதமான வேகம் ஏற்பட்டது. தூரத்து சுவரின் மேல் தெரியும் ஒளிமங்கிய ஒவியம் போலத் துறைமுகமும், கொழும்பு நகரமும் மெல்ல மெல்லப் பின்த்ங்கிப் போய்விட்டன. கிராதியருகே நின்று கொண்டிருந்த அவன் கண்களில் தேங்கியிருந்த இரண்டு சொட்டுக் கண்ணிர் கடலின் உப்புநீரில் சிந்திக் கலந்தன. கண்களைத் துடைத்துக் கொண்டு தன் இடத்தில் போய் உட்கார்ந்து கொண்டான்.

தன்னைத் தானே ஏற இறங்கப் பார்த்துக்கொண்ட போது அவனுக்குச் சிரிப்பு வந்தது. வலக் கை விரல்களில், மோதிரம், இடக் கை மணிக்கட்டில் பள்பளவென்று பொன் நிறம் மின்னும் புத்தம் புதுக்கைக்கடிகாரம், யாரோ பணக்கார மனிதர் ஊர் திரும்புகிற மாதிரிப் பழக்கூடைகள், துணிைமணிகள் எல்லாம் தன்னைச் சுற்றி வைக்கப்பட்டிருப்ப தைக் கண்டான்.அவன் எதை நினைத்துத் தனக்குள் சிரித் துக் கொண்டர்ன்ோ, அதையே கேள்வியாகக் கேட்டுவிட் டார் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருந்த ஒரு கிழவர்.

'தம்பிக்குக் கொழும்பிலே ஏதாவது பெரிய வியா பாரமோ?" - -

"இல்லை! இதரிந்தவர்கள் இருக்கிறார்கள். சும்மா ஊர் சுற்றிப் பார்த்துவிட்டுப் போகலாமென்று வந்தேன். வந்து, இரண்டு மூன்று வாரங்கள் ஆகிவிட்டன. இன்றைக்கு ஊர் திரும்புகிறேன்."- பிழைப்புக்காக. வந்திருந்தேன்-என்று சொல்ல விரும்பவில்லை இப்போது அவன். அதனால் வேண்டுமென்றே ஊர் சுற்றிப் பார்க்க வந்ததாகப் புளுகினான் - - -

"கடிகாரம் புதிதாகத் தெரிகிறதே! கொழும்பில் வாங் கினதோ?" -

"ஆமாம்! இங்கே இருப்பவர்கள் பிரியப்பட்டு வாங்கிக் கொடுத்தார்கள்." - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/253&oldid=597779" இலிருந்து மீள்விக்கப்பட்டது