பக்கம்:பிறந்த மண்.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 253 .

போட்டுவிட வேண்டும். நான் கொழும்பிலிருப்பதாக நினைத்துக்கொண்டு அவன் தொடர்ந்து அங்கே கடிதம் எழுதிக் கொண்டிருக்கப் போகிறான். 'முடிந்தால் குறிஞ்சி பூருக்கு வத்து ஒரு நடை சந்தித்து விட்டுப் போ. நான் இனிமேல் ஊரிலேயேதான் இருப்பேன். வேறெங்கும் போகப் போவதில்லை-என்று எழுதினால் அவன்கூட இங்கே வந்துவிட்டுப் போவான். அதுதான் சரி; அப்படியே அவனுக்கு ஒரு கடிதம் எழுதிவிடுவோம். . .

கப்பல் தூத்துக்குடிக்குப் போகும்போது சாயங்கால மாகிவிடும். அத் தறுவாய்க்கு மேல் தாத்துக்குடியிலிருந்து குறிஞ்சியூருக்குப் பஸ் கிடைக்குமோ? கிடைக்காதோ? ஒரு சுமையும் இல்லாமலிருந்தால் டிரங்கைக் கையில் பிடித்துக் கொண்டு கால்நடையாகவே பஸ் ஸ்டாண்டிற்குப் போய் விடலாம். அப்பப்பா இந்த சபாரத்தினமும், வோட் ஹவுஸ் தம்பதியும் சேர்ந்து கொண்டு இல்லாத கூத்தெல் லாம் செய்திருக்கிறார்களே, கடைவீதியிலுள்ள பழங்களை யெல்லாம் வாங்கிக் கட்டிவிட்டிருக்கிறார்களே! இவ்வளவு பழக்கூடைகளையும், புதுத் துணிமணிகளையும் கொண்டு. போய் நான் என்ன செய்யப் போகிறேன்?

காந்திமதி ஆச்சியின் குடும்பத்தைப் பற்றி நினைத்துக் கொண்டான். பகவதியின் அழகிய கண்கள் அவன் நின்ைவில் தோன்றின. அந்தப் பெண்ணைக் குளத்திலிருந்து காப் பாற்றிய நிகழ்ச்சியிலிருந்து ஒவ்வொன்றாக அவன் நினைத் தான். தான் ஊரிலிருந்து புறப்படுகிற அன்றைக்குக் கட்ை வாசலில் நின்று பகவதியும், அவள் தங்கை கோமுவும் தன்னைப் பார்த்த ஏக்கம் நிறைந்த பார்வை இன்னும் அவன் கண்களுக்குள்ளேயே இருந்தது. பின்பு கொழும்பி விருக்கும்போது ஆச்சியிடமிருந்து தனக்கு வந்த கடிதத்தில் 'அக்காவுக்கும் எனக்கும் சதா உங்கள் நினைவாகவே இருக்கிறது, என்று கடைசியில் ஒர் ஒரத்தில் கோமு

கிறுக்கியிருந்த எழுத்துகளை நினைத்தான். அவன்

வோட்ஹவுஸ் வாங்கிக் கொடுத்திருக்கும் துணிமணிகளில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/255&oldid=597783" இலிருந்து மீள்விக்கப்பட்டது