பக்கம்:பிறந்த மண்.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த்ர். பார்த்தசாரதி 257

இறங்கியதும் முருகேசனுக்குக் கடிதம் போட வேண்டும் -என்று தான் தீர்மானித்திருந்ததை அவன் நினைத்துக் கொண்டான்

தபாலாபீஸ் பக்கத்தில்தானே இருக்கிறது? பஸ் வரு வதற்குள் நீ போய்விட்டு வந்துவிடலாமா?’-என்று கூலி யாளைக் கேட்டான். 'ஆகட்டும் ஐயா போய்விட்டு வந்து விடலாம்’-என்று பதில் சொன்னான் கூலியாள். அழகிய நம்பி காசை எடுத்துக்கொடுத்து அந்தக் கூலியாளை அனுப் பினான். தான் பஸ்ஸில் ஏறி உட்கார்ந்து கொண்டு கார்டில் நாலு வரி அவசர அவசரமாகக் கிறுக்கி முருகேசனுடைய விலாசத்தையும் எழுதி அதை அந்தக் கூலியாளிடமே சொல்லித் தபால் பெட்டியில் போடச் செய்துவிடலாம் - என்று அவன் எண்ணிக் கொண்டிருந்தான். அந்தச் சமயத்தில் ஒர் ஆச்சரியம் நடந்தது. திடீரென்று அவன் எதிர்பாராத விதமாக முருகேசனே அவன் முன்னால் வந்து நின்றான்.

என்னப்பா இது? நான் என் கண்களால் இங்கே பார்ப்பது அழகியநம்பியைத் தானா? நீ எப்போது ஒரு ரென்று கொழும்பிலிருந்து இங்கே வந்து குதித்தாய்" என்று சிரித்துக்கொண்டே கேட்டான் முருகேசன். திடீ ரென்று அவனை அங்கே சந்தித்த வியப்பிலிருந்து தெளி வடைந்து பேசுவதற்கே சிறிது நேரம் பிடித்தது அழகிய நம்பிக்கு. .

“s; எப்படித் தென்காசியிலிருந்து திடீரென்று தாத்துக் குடியில் வந்து குதித்தாயோ, அத்ேமாதிரித்தான் என் றான் அழகிய நம்பி. . .

"விளையாட்டுப் பேச்சு அப்புறம் இருக்கட்டும். நீ எப்போது கொழும்பிலிருந்து திரும்பினாய் என்ன காரணம் இவ்வளவு அவசரமாகத் திரும்பிவிட்டாயே, போய் இரண்டு மூன்று வாரம்கூட ஆகவில்லையே?’-என்று பரபரப்பாக முருகேசன் கேள்விகளைத் தொடுத்தான். .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/259&oldid=597793" இலிருந்து மீள்விக்கப்பட்டது