பக்கம்:பிறந்த மண்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 سهها عفوف

போது கவனமாக இருக்கவேண்டும்"-அழகியநம்பி இதைக் கூறிவிட்டு காந்திமதி ஆச்சியிடம் விடைபெற்றுக் கொண்டு எழுந்திருக்கத் தயாரானான். - -

"இந்தா பகவதி! தம்பிக்கு நாலு இட்டிலி கொண்டு வந்து வை." - - -

"இல்லை ஆச்சி! நான் வீட்டில் சாப்பிட்டுவிட்டுத்தான் வருகிறேன். நான் வந்த காரியத்தை மறந்துவிட்டேனே? இன்றைக்குத் துத்துக்குடிக்குப் புறப்பட்டுப் போய் நாளைக்கோ, நாளைக் கழித்து மறுநாளோ,கொழும்புக்குக் கப்பலேறுகிறேன். அம்மாவும், தங்கை வள்ளியம்மையும் இங்கே ஊரில்தான் இருக்கப் போகிறார்கள். இரண்டு வரு ஷமோ, ஏழு வருஷமோ எவ்வளவு காலத்துக்குப் பிறகு திரும்புவேனென்று எனக்கே தெரியாது. வீட்டையும், அம்மா, தங்கையையும் கவனித்துக் கொள்ளுங்கள்."அவன் இதைச் சொன்னதும் ஆட்டு உரல் ஒசை நின்றது. கரண்டியால் மாவூற்றும் ஓசை நின்றது. மூன்று திசைகளி லிருந்து ஆறு வேறுகண்கள் வியப்புடன் அவனை நோக்கின. பகவதி, கோமு, ஆச்சி மூன்று பேரும் அவனை ஏறிட்டுப் பார்த்தள்ர்கள். அடுப்பு எரியும் ஒலி, உலை நீர் கொதிக்கும் ஒசை, வாசலில் அரட்டைக் குரல்கள், இவை தவிர ஒரு கணம் பேச்சரவமற்ற அமைதி அங்கே நிலவியது

"இன்றைக்கே இங்கிருந்து புறப்படுகிறாயா தம்பி?’: அகமதியைக் கலைத்துக் கொண்டு ஆச்சி கேட்டாள். அதற்குப் பதில் சொல்வதற்காக.அவன் வாய் திறந்த அதே சமயத்தில் ஒர் இலையில் சூடாக ஆவிபறக்கும் இட்டிலி களை அவனுக்கு முன்னால் கொண்டு வந்து வைத்தாள் பகவதி. - - -

"கோமு:இந்த மாமாவுக்குக் கெட்டிச் சட்டினியாகக் கொஞ்சம் கொண்டு வந்து போடு."-ஆச்சி கோமுவை ரவி னான். பகவதி தண்ணிரையும் செம்பையும் பக்கத்தில் கொண்டு வந்து வைத்தாள். - r

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/26&oldid=596656" இலிருந்து மீள்விக்கப்பட்டது