பக்கம்:பிறந்த மண்.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 - பிறந்த மண்

- 'முருகேசா! எல்லாம் பின்பு விவரமாகச் சொல்லு கிறேன். நானே உனக்கு என் வரவு தெரிவித்துக் சுடித மூலமாகக் குறிஞ்சியூரில் வந்து சந்திக்கச் சொல்லி எழுதலா மென்று இப்போதுதான் என்னோடிருந்த கூலியாளைத் தபாலாபீஸுக்கு அனுப்பினேன். உனக்கு ஆயுள் நூறுதான்! போனவன் கார்டு வாங்கிக் கொண்டு வருவதற்குள் நீயே வந்துவிட்டாய்.” -

"இன்றைக்கு எங்கள் உறவு முறையைச் சேர்ந்த ஒரு வருக்கு இந்த ஊரில் கல்யாணம். அதற்காக வந்தேன். முகூர்த்தம் காலையிலேயே முடிந்துவிட்டது. இதோ ஊருக்குப் புறப்பட்டுக் கொண்டிருக்கிறேன். பஸ்ஸிற்கு டிக்கெட் கூட வாங்கியாகி விட்டது”-என்று முருகேசன் கூறிய போது "நீ இப்போது ஊருக்குப் போகவேண்டாம், என்னோடு குறிஞ்சியூருக்கு வந்து இரண்டு நாள் இருந்து விட்டுப் போ. உன்னிடம் சில முக்கியமான விஷயங்கள் கலந்து பேசவேண்டும் எனக்கு’-என்று இடைமறித்துச் சொன்னான் அழகிய நம்பி

'டிக்கெட் வாங்கிவிட்டேனே? வாங்கினால் என்ன @° முழுகிப் போயிற்று? பணம் வேனுமானால் நான் தருகிறேன்.” -

"பணத்திற்குச் சொல்லவரவில்லை. வீட்டில் எதிர்பார்ப் பார்களே என்று தயங்கினேன். பரவாயில்லை! நான் வரு கிறேன். குறிஞ்சியூருக்கே போவோம். எனக்கும் சேர்த்து ஒரு டிக்கெட் எடுத்துவிடு'-என்று ஒப்புக்கொண்டான், முருகேசன்

கூலியாள் கார்டு வாங்கிக்கொண்டு வந்தான், பஸ்ள சம் வந்தது. சாமான்கள் ஏற்றப்பட்டன. முருகேசனும் அழகிய நம்பியும் ஏறிக்கொண்டனர். கூவியாள் சில்லறையை வாங் கிக்கொண்டு போய்ச் சேர்ந்தான். அழகியநம்பி இருவ ருக்கும் சேர்த்து டிக்கெட் வாங்கினான். சிறிது நேரத்தில் பஸ் புறப்பட்டது . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/260&oldid=597795" இலிருந்து மீள்விக்கப்பட்டது