பக்கம்:பிறந்த மண்.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28. முருகேசனின் யோசனை

பஸ்ஸில் பிரயாணம் செய்கிறபோதே தான் தாய் நாட்டுக்குத் திரும்ப நேர்ந்த காரணங்களை முருகேசனுக்கு விவரித்துச் சொல்லிவிட்டான் அழகிய நம்பி. தன்னுடைய எதிர்கால நோக்கங்களையும், இலட்சியங்களையும் கூட முடிந்த மட்டில் வெளிப்படையாகவும் குறிப்பாகவும் அவனிடம் தெரிவித்தான். முருகேசன் அவற்றைக் கேட்டுச் சிரித்தான் -

"அழகியநம்பி! இதென்னப்பா குருட்டு நோக்கமாக இருக்கிறது? படித்தவன் கிராமத்தில் உட்கார்ந்து கொண்டு நிலங்களைக் குத்தகை பிடித்து ‘நான் கலப்பை கட்டி உழப் போகிறேன்’ என்றால் யாராவது நம்புவார்களா? உனக்கு மூளை கோளாறாகிவிட்டதென்று எல்லாரும் கேலி செய்வார்கள். முன்பின் விவசாயம் செய்து பழக்கப் படாதவன் நீ உனக்கென்று சொத்த நிலமும் உன்னுடைய கிராமத்தில் கிடையாது. சரி, மற்றவர்களுடைய நிலத்தை வாரத்துக்கோ, மொத்தக் குத்தகைக்கோ, கேட்கிறாய் என்று வைத்துக் கொள்வோம். உன்னை நம்பி யாராவது நிலங்களை விடுவார்களா? உனக்கு மிகவும் வேண்டியவர் களாகவே இருந்தாலும் உன் நோக்கத்தையும் இலட்சியத் தையும் புரிந்துகொண்டு உனக்கு உதவ முன் வரமாட்டார் களே. தம்பி! நீ படித்த பையன். உனக்கு எதற்கு இந்த வம்பெல்லாம்? பேசாமல் பட்டணத்துப் பக்கங்களில் ஏதாவது நல்ல உத்தியோகமாகப் போய்ப்பார். கைநிறையச் சம்பாதிக்கலாம்'- என்று உனக்கே புத்தி சொல்லத் தொடங்கிவிடுவார்கள். இலங்கையில் தேயிலைத் தோட்டங் களிலும், ரப்பர் தோட்டங்களிலும் நீ கண்ட உழைப்பு மண்ணைப் பொன்னாக்கியிருக்கலாம். அதே இலட்சியங்கள் தமிழ்நாட்டின் அறியாமை நிறைந்த கிராம மக்களுக்குச் கலபத்தில் புரிந்துகொள்ள முடியாதவை. இந்த மாதிரி உயர்ந்த விஷயங்களைப் புத்தகங்களில் எழுதவும் மேடை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/261&oldid=597798" இலிருந்து மீள்விக்கப்பட்டது