பக்கம்:பிறந்த மண்.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 26 i

நோக்கி நடந்தனர். ஊர் அடங்கிப் போயிருந்தது. மலை யடிவாரத்துக் குளிர், முகத்திலும் காதோரங்களிலும் உறைத்தது -

மங்கிய நிலவொளியில் ஒசையடங்கிப் போய் நீண்டு கிடக்கும் தெருக்கள், பெருமாள் கோயில் கோபுரம், தெப்பக் குளம், நாற்புறமும் நிலவொளியும் தமதியற்கை நீலநிறமும் கலந்து தெரியும் மலைகள், மரக் கூட்டங்கள் ஆறுதல்எல்லாவற்றையும் பார்த்தபோது இழந்துபோன குபேர சம்பத்துத் திரும்பக் கிடைத்துவிட்டது போலிருந்தது அழகிய நம்பிக்கு s

பஸ் ஸ்டாண்டிற்கும் கிராமத்திற்கும் ஒரு பர்லாங் தூரத்திற்குக் குறையாது. ஊரைவிட ஐம்பது அறுபது அடி மேடான இடத்தில் .ஸ் ஸ்டாண்டு அமைந்திருந்ததனால் அங்கிருந்து ஊருக்குள் செல்லும் சாலையில் நடந்து கொண்டே பள்ளத்தில் ஊரின் மொத்தமான தோற்றம் முழுவதையும் பார்க்க முடியும்.

- ஊரில் எங்கோ குரைக்கும் தெரு நாயின் ஒசை,மாட்டுக் கொட்டங்களில் வைக்கோல் தின்று கொண்டிருக்கும் மாடு களின் கழுத்து மணிகள் ஆடும் ஒலி, தெருத் திண்ணை களிலும் கட்டில்களிலும் படுத்து உறங்குவோரின் குறட்டை ஒலி, சிள் வண்டுகளின் சப்தம், வயலோரத்து வாய்க்கால் மதகுகளில் தண்ணிர்பாயும் களகள சப்தம்-ஜீவன் துடிக் கும் குறிஞ்சியூரின் அந்த ஒலிகள் அழகியநம்பிக்குக் காரண மில்லாமல் இறுமாப்பு அளித்தன. கர்வம் உண்டாக்கின. களிப்பு உண்டாக்கின

மேற்கே மலைச்சிகரங்களில் குங்குமப் புள்ளிகள்போல் அங்கங்கே நெருப்பு எரிவது தெரிந்தது. ‘இதெல்லாம் காட்டிலாகாவில் ஒன்றும் கேள்வி முறை இல்லையோ?மலை யின் அழகை இப்படித்தீ மூட்டம் போட்டுப் பாழாக்குகிறார்

பி-17 - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/263&oldid=597803" இலிருந்து மீள்விக்கப்பட்டது