பக்கம்:பிறந்த மண்.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264 - பிறந்த or

முருச்ேசனும் மாடியில்தான் போய்ப் படுத்துக்கொள்ளப் போகிறோம். . +

நீங்கள் இரண்டுபேரும் சாப்பிட வேண்டாமோ? அடுப்புை மூட்டி ஏதாவது செய்கிறேனே?”

  • இல்லை அம்ம்ாl ஒன்றும் வேண்டாம். பசி இல்லை. தாக்கம்தான் வருகிறது. தூங்கப்போகிறோம்.வள்ளியம்மை எங்கே? உள்ளே தூங்குகிறாளோ?” -

"ஆமாம் எழுப்பட்டுமா?

வேண்டாம்? இப்போதென்ன அவசரம்? காலையில்

பார்த்துக் கொள்ளலாம்.”

அம்மா மாடியைத் திறந்து தூசிபோகப் பெருக்கிவிட் டாள். அவன் ஊருக்குப் போனபின் அதைத் திறக்கவ்ேண் டிய அவசியமே அம்மாவுக்கோ, வள்ளியம்மைக்கோ ஏற்பட் டிருக்காது! அழகியநம்பியும் முருகேசனும் படுக்கையை விரித்துப் படுத்துக் கொண்டார்கள். பிரயாண அலுப் பினால் சிறிது நேரத்தில் இருவருமே நன்றாகத் துரங்கிவிட் டார்கள் -- ... 6 " ...

விடியற்காலையில் அவர்கள் எழுந்திருக்கும்போது மணி ஏழுக்கு மேலிருக்கும். மாடி வராந்தாலில் சுள்ளென்று வெயில்பட்டு உழைத்துக்கொண்டிருந்தது. அவர்கள் போக் கில் தாங்கவிட்டிருந்தால் பத்துப் பதின்ோரு மணிவரை கூடத் துணங்கிக்கொண்டிருப்பார்கள் போலிருக்கிறது.அம்மா வந்து எழுப்பிவிட்டாள் -

“நாலைந்து நாட்களுக்கு முன்னால் மேற்கே மலையில் r நல்ல மழை. குறிஞ்சி அருவியில் தண்ணிர் நிறையவருகிறது. போய்ப் பல்தேய்த்துக் குளித்துவிட்டு வாருங்கள். அதற் குள் இங்கே காப்பி பலகாரம் தயாராகிவிடும்’-என்றான் அம்மா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/266&oldid=597810" இலிருந்து மீள்விக்கப்பட்டது