உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பிறந்த மண்.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 - . பிறந்த மண்

காது. தங்களுக்குள் ஒருவனாக, சாதாரணமானவனாக இவர்கள் உன்னையும் கருதத் தொடங்கிவிடுவார்கள்.இவர் களையும் போல நீயும் நிலத்தை ஏர்பூட்டி உழுது உழைத் துப் பாடுபட விரும்புகிறாய் என்று தெரிந்தால் அதைப் பரந்த நோக்குடன் எண்ணி வரவேற்கக்கூட இவர்களுக்குத் தெரியாது. அவர்களுக்குப் போட்டியாக முளைத்துவிட்டா யென்று உன்மேல் வெறுப்பும்,அசூயையும் கொள்வார்கள்." எச்சரிப்பது போல் கூறினான் முருகேசன்.

'யார் என்ன எண்ணிக் கொண்டால் என்ன? என் எண்ணத்தை நான் மாற்றிக் கொள்ளப்போவதில்லை. என் உழைப்புக்கு மக்கள் மரியாதை செய்யவேண்டாம். எந்த' மண்ணில் உழைக்கிறேனோ; அந்த மண் மரியாதை செய் தால் போதும், அதை நான் நம்புகிறேன்"என்றான் அழகிய நம்பி. திடமான குரலில் பேசினான் அவன்.

அவர்கள் இருவரும் அப்போது குறிஞ்சியூர் மேற்கு ஜல்த் தொடரை ஒட்டினாற்போல் ஒடும் ஆற்றின் கரை பில் நடத்து கொண்டிருந்த்ன்ர். அந்த ஆறு மலையிலிருந்து சமதரைக்கு இறங்கும் இட்ம்தான் குறிஞ்சி அருவி. அதை இடவதற்கு இன்னும் இரண்டு பர்ல்ாங் நடக்கவேண்டும்.

ஆற்றோரமாக மலையடிவாரத்தை ஒட்டி ஒரு கால் மைல் அரைமைல் சுற்றளவுக்கு வண்டல் நிலம் புறம்போக் காகக் கிடந்தது. ஆற்றைக் காட்டிலும் மேட்டுப்பாங்கிலும் மலைச்சாரலைக் காட்டிலும் பள்ளமான இடத்திலும் அந்த அண்ட்ல் நிலம் அண்டிந்திருந்தது .--

அந்த இடத்திற்கு வந்ததும் முருகேசன், தயங்கி நின் றான். சுற்றிலும் ஏறிட்டுப் பார்த்தான். "ஆழ்கியநிம்பி

எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது! இப்படுல்க் யாருக் காவது சொந்தமா? அல்லது. சர்க்காரின் புறம்போக்குத்

தரிசு நிலமா?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/268&oldid=597815" இலிருந்து மீள்விக்கப்பட்டது