நா. பார்த்தசாரதி 267.
"ஏன்? இது ஆற்றுப்படுகை யாருக்கும் சொந்தமில்லை. சர்க்கார் புறம்போக்குத் தரிசுதான். &
"நான் உனக்கு ஒர் அருமையான யோசனை சொல் கிறேன். ஊரார் நிலத்தைக் குத்தகைக்கும், வாரத்துக்கும் பேசினால் பேசினபடி வாரமும், குத்தகையும் கொடுக்க உன் னால் முடியாது. உன்னை நம்பி நிலத்தை அடைக்கமாட் டார்கள். இதுதான் உன் இலட்சியம் என்று நீ உறுதியாகத் தீர்மானித் திருக்கும் பட்சத்தில் கிராம முன்சீப்பையும் கலந்துகொண்டு சர்க்காருக்கு ஒரு மனு எழுதிழ் போடு! சொல்கிறேன்” என்றான் முருகேசன்.
29. அவநம்பிக்கைப் பேச்சுகள்
குறிஞ்சியருவியில் குளித்துவிட்டு விட்டிற்குத் திரும்பி வருகிறபோது அவர்கள் அதே திட்டத்தைப் பற்றித்தான் பேசிக்கொண்டு வந்தார்கள்.
"தீர்வை செலுத்தி ஒழுங்காக சாகுபடி செய்வதாக மனு அனுப்பினால் புறம்போக்கு நிலத்தை ஜாரி செய்தர் கொடுப்பதில் அதிகம் தகராறு இருக்காது. உன் விண்ண்: பத்தை கிராம முன்சீப் சிபாரிசு செய்து ரெவின்யூ இன்ஸ் பெக்டருக்கு அனுப்பினால் அவர் வ்ந்து புறம்போக்குத் தரிசைப்பார்வையிடுவார். உன்னைக் கூப்பிட்டு விசாரிப் பார். பின்பு மேலதிகாரிக்குச் சிபாரிசு செய்து அனுப்புவார். ஒரு மாதத்திற்குள் நிலத்தை உன் பெயருக்கு ஜாரி செய்து உன்னிடமிருந்து மகசூல்படி தீர்வை வசூலிக்கச் சொல்லிக் கிராம முன்ப்ேபுக்கு உத்தரவு வந்துவிடும்."
'இதெல்லாம் இவ்வள்வு. விவரமாக உனக்கு எப்படித் தெரியும் முருகேசா?’! .
'என் தந்தை ர்ெவின்யூ இன்ஸ்ப்ெக்டராக இருந்து ஒய்வுபெற்றிருக்கிறார் என்பதை முன்பே உனக்குச் சொல்லி யிருக்கிறேனே. அதற்குள் மறந்து விட்டாயர்?" என்று