பக்கம்:பிறந்த மண்.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி . . 269

"நீயும் கூட வா. வீட்டில் போய்ச் சாப்பிட்டுவிட்டு இரண்டு பேருமாகப் போய் அவரைச் சந்திப்போம். முடிந் தால் அப்படியே மனுவையும் எழுதிக் கொடுத்துவிடலாம். உன்னுடைய நம்பிக்கையின் பேரில் தான் நான் இந்தக் காரியத்தைச் செய்யவேண்டும்." .

"கூடாது எந்தக் காரியத்துக்கும் இன்னொருவருடைய நம்பிக்கையை விட தன்னம்பிக்கைதான் அவசியம்’ என்று சொல்லிச் சிரித்தான் முருகேசன். இருவரும் வீட்டுக்குள் நுழைந்தனர். காப்பி, பலகாரம் ஆயிற்று. முருகேசன் மாடிக்குப் போனான். அழகியநம்பி அம்மாவுக்குக் கொழும் பில் நடந்த விவரங்களைச் சொன்னான். அம்மா எல்லா வற்றையும் கேட்டுப் பெருமூச்சு விட்டாள்

"பிர்மநாயகம் இனிமேல் என்ன ஆவார்?'

ஆவதென்ன? இலட்சக்கணக்கில் சர்க்காருக்குச் சேர வேண்டிய பணத்தை மோசடி செய்திருக்கிறார். ஒரு கொலையும் செய்திருக்கிறார். ஆயுள் தண்டனை-அல்லது தூக்குத் தண்டனைக்குக் குறைவாக எதுவும் கிடைக்கா தென்று பேசிக் கொள்கிறார்கள்.” - -

"சொந்த ஊரில் பிழைக்க வழியில்லை, கடல்கடந்து போயும் அங்கும் உன் அதிர்ஷ்டம் இப்படி முடிந்துவிட்டது. இனிமேல் என்ன செய்யப் போகிறாய்?" -

"சொந்த ஊரிலேயே பிழைப்பதென்று தீர்மானித்து விட்டேன் அம்மா!" - - ..

"என்னது? சொந்த ஊரிலா? என்ன செய்யப்போகி நாய்? பன்னீர்ச்செல்வம் மாதிரி பணம் வைத்துக்கொண்டி ருக்கிறாயா, இருந்த இடத்திலிருந்தே கரியையும், விறக்க யும் அனுப்பி இலட்சம் இலட்சமாகக் குவிப்பதற்கு? இருக் கிற கடனையே அடைக்க வழியில்லை. தங்கை வேறு ஒருத்தி இருக்கிறாள் கல்யாணத்துக்கு!” . . . . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/271&oldid=597823" இலிருந்து மீள்விக்கப்பட்டது