பக்கம்:பிறந்த மண்.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*Bhra பார்த்தசாரதி 27.

சட்டையை மாட்டிக்கொண்டு புறப்படத் தயாராயிருந் தவன் அவற்றையும் வாங்கி அணிந்துகொண்டான்.

நான் இப்படிக் கொஞ்சம் வெளியில் போய்விட்டு வருகிறேன் அம்மா!' - -

தாய் பதில் சொல்லவில்லை. அவளுக்கு அவன் மேல் கோபம் போலிருக்கிறது. அவனும் அவள் பதிலுக்காகக் காத்துக் கொண்டிருக்கவில்லை. பழங்கள் முதலியவற்றை எடுத்துக் கொண்டு மாடியிலிருந்த முருகேசனுக்கு வாசல் படியில் நின்று குரல் கொடுத்தான். முருகேசன் இறங்கி வந்ததும் இருவ்ரும் கிளம்பினர் .

வழியில் எதிர்ப்பட்டவர்கள், அவனாகவே வலுவில் போய்ச் சந்தித்தவர்கள்,-எல்லாரிடமும் கிராமபோன் ரிகார்டு போல் திரும்பத் திரும்பத் தான் கொழும்பிலிருந்து வரநேர்ந்த காரணங்களை ஒப்பிக்க வேண்டியிருந்தது. சிலர். தாங்களாகவே அவனைத் தூண்டிக் கேட்டார்கள், சிலரிடம் அவனாகவே அதை ஒப்பித்தான். எல்லாருமே அவன் கூறியவற்றைக் கேட்டுவிட்டு முடிவில் தவறாமல் ஒரு கேள்வியை அவனிடம் கேட்டார்கள். . .

இனிமேல் என்ன செய்யப்போகிறீர்கள். தம்பி’ என் கேள்விதான் அது. சாதாரணமாக இந்தக் கேள்வியைக் கேட்டவர்களுக்குப் பொதுவாகப் பதில் சொல்லி மழுப்பி விட்டான் . . . . . .

புலவர் ஆறுமுகம், வாசகசாலைக் கந்தப்பன், மணியம் நாராயணப்பிள்ளை, ஆகிய ஒரு சில முக்கியமான மனிதர் களிடம் தன்னுடைய எதிர்காலத்திட்டங்களை விவரித்து அது பற்றி அவர்கள் கருத்தைக் கேட்டான். ஒருவராவது அவன் சருத்தை ஆதரித்து, "அப்படிய்ே செய் தம்பி! அது நல்ல திட்டம்தான்'-என்று சொல்ல முன்வரவில்லை.

"எதற்குத் தம்பி உங்களுக்கு இந்த வம்பு எல்லாம்?

பேசாமல் பட்டினக் கரைகளில் எங்காவது உத்தியோகம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/273&oldid=597828" இலிருந்து மீள்விக்கப்பட்டது