பக்கம்:பிறந்த மண்.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நச். பார்த்தசாரதி 273

பேசுகிறாளே’-என்று நினைத்துக்கொள்ளாதே. என்னிடம் கையில் கொஞ்சம் ரொக்கமும் இந்தக் கடையும், பத்து மரக்கால் விதைப்பாட்டுக்கு நன்செயும் இருக்கின்றன. எனக்குப் பிள்ளை வாரிசு இல்லை. பகவதியையும் கட்டிக் கொடுத்து இவ்வளவையும் உன் கையில் ஒப்படைத்துவிடு கிறேன். நானும் இருக்கிற வரை உன்னிடமே இருந்துவிடு கிறேன். பிற்காலத்தில் கோமுவைப் பெரியவளாக வளர்த்து வாழவைக்க வேண்டியதும் உன் பொறுப்பு உன் தங்கை வள்ளியம்மைக்கும் நல்ல இடமாகப் பார்த்துக் கட்டிக் கொடு. ஊரோடு இருந்து கடையை நடத்திக்கொண்டு நிலத்தையும் மேற்பார்த்துக்கொள்ளலாம். இந்த யோசனை யால் உன் குடும்பமும் உருப்படும். என் குடும்பமும் உருப் படும். இதை முன்பே ஜாடையாக உன் அம்மாவிடமும் சொல்லியிருக்கிறேன். இதைவிட்டு அந்த ஆற்று வண்டலில் மண்வெட் டியைப் பிடித்துக்கொண்டு. கஷ்டப்படுவதில் என்ன சுகம் கிடைக்கப் போகிறதோ உனக்கு?'-ஆச்சியின் புதிய யோசனை அவனைத் திகைக்கச் செய்தது. ஒரு விநாடி அவன் மனம் சபலமடைந்தது. ஆகட்டும் அப்படியே செய்துவிடலாம்'- என்று ஆச்சியிடம் தன் சம்மதத்தைச் சொல்லிவிடலாமென்றுகூட அவனுக்குத் தோன்றியது. அவன் மனத்தின் அந்தரங்கத்தில் எந்தப் பெண் ஒளிந்து கொண்டிருக்கிறாளோ அவளையும் கொடுத்துக் கஷ்டமில்லாமல் வர்.ழப் போதுமான சொத்து களையும் தருகிறபோது எப்படி மறக்கத் தோன்றும்?

'உன் அம்மாவிடம் கலந்தாலோசித்துக் கொண்டு இன்னும் பத்துப் பன்னிரண்டு நாளில் எனக்கு ஒரு முடிவு சொல்.” * : - . . . . . . . . . . . . . .

'ஆகட்டும்! யோசித்துச் சொல்லுகிறேன்-என்று பொதுவாகப் பதில் சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட் டான் அவன். அவனும் முருகேசனும் வாசற்பகுதி இறங்கித் தெருவில் நடந்தபோது கோமு மூச்சு இரைக்க இரைக்க வேகமாக ஓடிவந்தாள் * . . ." o

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/275&oldid=597832" இலிருந்து மீள்விக்கப்பட்டது