பக்கம்:பிறந்த மண்.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

??4 - பிறந்த மண்

"என்ன கோமு!” "மாமா வந்து...நான். அம்மா உங்களுக்கு எழுதச் சொன்ன கடிதத்தில் கடைசியாக ஒருவரி எழுதியிருந்தேனே அதைப் படித்தீர்களோ?"-அவனருகே வந்து நாணிக் கோணி நின்றுகொண்டு ஒடுங்கிய குரலில் மெதுவாகக் கேட்டாள் அழகியநம்பி சிரித்தான். "கோமு! இதை நீயாக வந்து கேட்கிறாயா?-கேட்டுக்கொண்டு வரச்சொல்லி உன் அக்கா அனுப்பினாளா?-முருகேசனையும் பக்கத்தில் வைத்துக் கொண்டு அவன் இப்படிக் கேட்டதும் கோமு வெட்க மடைந்து முகம் சிவக்கக் சிரித்துக் கொண்டே திரும்பி ஓடி விட்டாள் - - என்ன கேட்டாள்?”-என்றான் முருகேசன். 'ஒன்று மில்லை! வேறு விஷயம்”-என மழுப்பினான் அழகியநம்பி.

  • ஒ!....புரிகிறது எனக்கு” என்று அவன் முகத்தை ஏறிட்டுப் பார்த்துக்கொண்டே குறும்புத் தனமாகக் சிரித்தான் முருகேசன். அர்த்தம் நிறைந்து கனிந்த சிரிப்பு அது . . * ,

'சரி இப்போது நேரே முன்சீப் வீட்டிற்குப் போக வேண்டியதுதான். விண்ணப்பம் எழுதுவதற்குக் காகிதம், பேனா, எல்லாம் கையோடு கொண்டு வந்திருக்கிறேன்-- என்று பேச்சை மாற்றினான் அழகியநம்பி. "என்னப்பா இது வேதாளம் பழையபடி முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டது என்கிற கதையாக இருக்கிறதே? இத்தனை பேரிடமும் இவ்வளவு அறிவுரை கேட்ட பின்புமா நிலத்தை உழுது வாழ வேண்டுமென்ற ஆசையை நீ விடவில்லை?"முருகேசன் வியப்படைந்தவன் போல் அழகியநம்பியை வினவினான்.

- வசதிகள் நெருங்கி வருகிறதென்று அறிந்தவுடன் இலட்சியங்களை நழுவவிடுவதில் அர்த்தமில்லை. உயிரே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/276&oldid=597835" இலிருந்து மீள்விக்கப்பட்டது