பக்கம்:பிறந்த மண்.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ጎጎ6 பிறந்த மண்

செய்து அனுப்பிவிட்டால் இரண்டே நாளில் ரெவின்யூ இன்ஸ்பெக்டர் வ்ந்து பார்வையிட்டுத் தீர்வை நிர்ண்யம் செய்து விசாரித்துக் கொண்டுபோய் நிலத்தை உனக்கு ஜாரி செய்யச் சொல்லி உத்தரவு அனுப்பச் செய்து விடுவார். அந்தப்படுகை மேட்டுக்கு முழுதும் தீர்வையே வருஷத்துக்கு முந்நூறு ரூபாய்க்குக் குறையாமல் வரும். வருஷம் தவறாமல் தீர்வையைக் கட்டிவிட்டு அந்த நிலத்தில் நீ என்ன பயனடைய முடியும்? நிலத்தை ஒரு முறை ஜாரிசெய்து வாங்கிக் கொண்டால் பிறகு நீ தலைகீழாக நின்றாலும் பட்டாவை மாற்ற முடியாது. உனக்கு விளைகிறதோ, விளையவில்லையோ, தீர்வையைக் கட்டியாக வேண்டும்! இதையெல்லாம் நன்றாக யோசித்துப் பார்த்துக் கொண்டு அப்புறம் மனுவை என்னிடம் கொடு'....என்று அவன் எழுதிக் கையொப்பமிட்டுக் கொடுத்த காகிதத்தை அவனிடமே திருப்பிக் கொடுத்தார் முன்சீப்

'பரவாயில்லை! நான் நன்றாக யோசித்துமுடிவுசெய்து கொண்டுதான் வந்திருக்கிறேன், சிபாரிசு செய்து இன்றைக் குத் தபாலிலேயே அனுப்பிவிடுங்கள்”-என்று திரும்பவும் காகிதத்தை அவரிடமே நீட்டினான் அழகிய நம்பி அவர் வாங்கிக் கொண்டார். அழகியநம்பியும், முருகேசனும் அவர் பக்கத்திலேயே இருந்து அவர் அதை அன்றையத் தபாலில் அனுப்புகிறவரை பார்த்து விட்டுத்தான் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினார்கள். போகிறவழியில் தபாலாபி சிற்குப் போய் இரண்டு ஏர்மெயில் கடிதங்கள் வாங்கிச் சபாரத்தினத்திற்கும், வோட்ஹவுஸ் தம்பதிக்கும், தான் செளக்கியமாக வந்து சேர்ந்ததாக எழுதிப்போட்டான். வோட்ஹவுஸ் தம்பதிக்கு, எழுதிய கடிதத்திலேயே மேரிக்கும், லில்லிக்கும் தன் அன்பைத் தெரிவிக்குமாறு எழுதியிருந்தான். தான் குறிஞ்சியூரில் நண்பனோடு இருப்ப தாகவும் ஊர் திரும்ப ஏழெட்டு நாட்கள் ஆகுமென்றும்’

முருகேசன் தன் தந்தைக்கு ஒரு கடிதம் எழுதினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/278&oldid=597840" இலிருந்து மீள்விக்கப்பட்டது