பக்கம்:பிறந்த மண்.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நர். பார்த்தசாரதி 279

மிகவும் வேண்டியவர். அழகியநம்பிக்காகவோ, அவன் எழுதிக் கொடுத்த புர்ோநோட்டை நம்பியோ அவ்ர் கடன் கொடுக்கவில்லை. முருகேசனின் தந்தையை நம்பியே கொடுத்திருந்தார்

பணத்தைப் பெற்றுக் கொண்டு அவன் தென்காசியிலி ருந்து புறப்படும்போது, "அடுத்த மாதம் நானும் நண்பர் களும் மேற்குத் தொடர்ச்சி மலையில் உல்லாசப் பிரயாணம் செய்யத் திட்டமிட்டிருப்பதுபற்றி முன்பே உனக்குக் கடிதத் தில் எழுதியிருந்தேனே! நீயும் வ்ரமுடியுமா?” என்று கேட்

டான் முருகேசன்.' *

தெரிந்திருந்தும் கேட்கிறாயே! என்னுடைய உல்லாசப் பிரயாணமெல்லாம் இனிமேல் அந்த மலையடிவாரத்துப் படுகை நிலத்தின் மேல்தான். ஏற்கனவே நான் கடனாளி. இப்போது இன்னும் பெரிய கடனாளியாக மாறி மண்ணில்’ புணத்தைப் போடுகிறேன். என் நம்பிக்கையை அந்த மண் காப்பாற்றுமோ? ஏமாற்றிவிடுமேர்? எல்லாம் இனிமேல் தான் தெரியவேண்டும்’-என்று அவனுக்குப் பதில் சொன்னான் அழகிய நம்பி

கவலைப்படாமல் போய்க் காரியங்களைத் துணி வோடு செய். வெற்றிகரமாக முடியும்’-என்று ஆறுதல் சொன்னான் முருகேசன்.

"நீயும் உடன் வந்தால் நல்லது. எல்லா ஏற்பாடுகளை யும் உன் யோசனைகளையும் கேட்டுக்கொண்டு செய்வேன். மறுபடியும் வந்து பத்துநாள் இருந்துவிட்டுத் திரும்ப லாமே?' என்று அவனையும் உடனழைத்தான் அழகிய நம்பி. இப்போது எனக்குச் செளகரியப்படாது. முடிந்த போது பின்பொரு சமயம் வருகிறேன். அப்படி நான் வரும் போது உன்னுடைய ஆற்றுப் படுகையில் பசுமை குலுங்க வேண்டும்!” - என்று சிரித்துக்கொண்டே சொன்னான் முருகேசன். அழகிய நம்பி விட்ை பெற்றுக்கொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/281&oldid=597847" இலிருந்து மீள்விக்கப்பட்டது