பக்கம்:பிறந்த மண்.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280 பிறந்த மண்

குறிஞ்சியூருக்குப் புற்ப்பட்டான். ஊரில் கிராம முன்சீப் அவன் வரவை எதிர்ப்ார்த்துத் தயாராகக் காத்துக் கொண்: டிருந்தார். 'தம்பி படுகை நிலத்தை உன் பெயருக்கு: ஜாரி செய்து உத்தரவு வந்திருக்கிறது. தீர்வைப் பணத்தைக் கட்டிப் பட்டா வாங்கிக்கொள்”-என்று அவன் போய்ச் சேர்ந்ததும் அவனிடம் கூறினார் அவர். உடனே அவன் தீர்வையைக் கட்டித் தன் பெயருக்குப் பட்டா எழுதி வாங்கிக் கொண்டான்.

இடையே பன்னீர்ச்செல்வம் வந்து தம் கடனுக்கு வழி சொல்லுமாறு மிரட்டினார். "பொறுத்துக் கொள்ளுங்கள். தவணை முடிவதற்குள் உங்கள் கடனை எப்படியும் தீர்த்து விடுகிறேன்”-என்று சொல்லி அவரைச் சமாதானப்படுத்தி அனுப்பினான். காந்திமதி ஆச்சி கூப்பிட்டனுப்பினான். போனான். என்ன தம்பி! நான் அன்றைக்குச் சொல்விய விஷயத்தை அம்மாவோடு கலந்து ஆலோசனை செய்தாயா? உங்கள் முடிவு என்ன தெரிந்துகொள்வதற்காகத்தரின் உன்னைக் கூப்பிட்டனுப்பினேன் நான்"-என்று கேட்டாள். ஆச்சி.

ஆச்சிக்கு என்ன பதில் சொல்வதென்று தயங்கினான் அவன். திடீரென்று அவனுக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை. சட்டைப் பையிலிருந்து ரூபாய் நோட்டு களை எடுத்து ஐந்து பச்சை நோட்டுகளை எண்ணி வைத் தான். ஆச்சி! ஐநூறு ரூபாய் இருக்கிறது. நான் கொழும்பி லிருக்கும் போது நீங்கள் என் தாய்க்குக் கொடுத்த கட்னை அடைத்து விட்டேன். எடுத்து எண்ணி வைத்துக் கொள் ளுங்கள்.

- * . 'அடே! அசட்டுப் பிள்ளைl-அதை யார் கொடுக்கச் சொல்லி அவசரப்படுத்தினார்கள் உன்னை இப்போது? தான் கேட்டதற்குப் பதில் சொல்லாமல் எதோ ரோஷப்

பட்டுக் கொண்டு பணத்தை எண்ணி வைக்கிறாயே!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/282&oldid=597850" இலிருந்து மீள்விக்கப்பட்டது