பக்கம்:பிறந்த மண்.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறந்த மண்

போனால் போகட்டும் போ-என்று கோமுவுக்குச். சொல்லிவிட்டு, அசட்டுப்பிள்ளைதான்பிடித்தால் முரண்டு தான்" என்று தனக்குள் கூறிக்கொண்டர்ள் ஆச்சி.

கோபித்துக் கொண்டு போகிறாரா அம்மா?”....தாயின் மனநிலை தெரியாமல் மறுபடியும் பேச்சுக் கொடுத்தாள் 'கோமு."எப்படிப் போனால் உனக்கென்னடி பேசாமல் போ உள்ளே”-என்று சிறுமியின்மேல் ஆச்சி எரிந்து விழுந்தாள். உள்ளே நின்று கொண்டிருநத பகவதிக்கோ அழுகையே வந்துவிடும் போலிருந்தது

அந்தப் படுகை நிலத்து முயற்சியில் இறங்கிய நாளி லிருந்து அழகியநம்பிக்கு ஒரு வகையில் அல்ல, பலவகையில் மனவேதனைகள் ஏற்பட்டன. காந்திமதி ஆச்சியுடன் மனஸ் தாபம் ஏற்பட்டு இட்டிலிக் கடைப்பக்கம் போவதே நின்று விட்டது.வீட்டில் அம்மா அவனோடு பேசுவதையேநிறுத்திக் கொண்டுவிட்டாள். இருவருக்கும். பேச்சு வார்த்தை நின்று இரண்டு வாரத்துக்கு மேலாகிவிட்டது. ஊரில் பெரிய வர்கள்-வயதுவந்தவர்கள் அவனைப் பைத்தியக்காரன் போல் ஒதுக்கி நடத்துவது போன்று ஒரு பிரமை-ஒரு தாழ்வு மனப்பான்மை அவனுக்கு ஏற்பட்டது. சிலர் நேரிலேயே அவனைக் கேலி செய்தார்கள். இன்னும் சிலர் அவன் இல் லாத இடத்தில்.கேலியும் ஏளனமும் செய்தார்கள். தெருவில் அவன் நாலு பேர் கண்களில் படும்படி நடந்து சென்றாலே அவன்ை ஒரு விநோதப் பொருளாகச் சுட்டிக்காட்டிச் சிரித்துப் பேசுகிற வழக்கம் அந்த ஊரில் ஏற்பட்டு விட்டது.

ஆனால், இவற்றாலெல்லாம். அவன் தளர்ந்து விட வில்லை. அவனுடைய நம்பிக்கை வெறியை உழைப்பு வெறியை, இவை வளர்த்துவிட்டிருந்தன. அவன் மற்றவர். களிலிருந்து விலகித் தனியே ஒதுங்கினான். ஊரின் தோற் றத்தில் தனியே உயர்ந்து தெரியும் கோபுரம் போல் அவன் தனக்குத்தானே உயர்ந்து விளங்கினான். மறுநாளே அவனு டைய அசுர உழைப்பு அந்தப் படுகை நிலத்தில் ஆரம்புமா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/284&oldid=597855" இலிருந்து மீள்விக்கப்பட்டது