பக்கம்:பிறந்த மண்.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 283

யிற்று. பக்கத்து ஊர் மாட்டுச் சந்தைக்குப் போய் எண்ணுாறு ரூபாய்க்கு அருமையான காளைமாடுகளாகப் பார்த்து ஒரு ஜோடி பிடித்துக் கொண்டு வந்தான். ஏர், கலப்பை, மண் வெட்டி, கட்டைவண்டி, இந்த மாதிரி வகையில் ஓர் ஐநூறு' ரூபாய் செலவாயிற்று. கிராமத்தில் அவனை நம்பி வந்து உழைக்க எந்தக் கூவியாளும் தயாராயில்ஆைதையெண்ணி அவனும் வருந்தவில்லை. 'பத்துக் கூலிகள், உடன் வந்து உழைத்தால் பத்துநாளில் பயிர் செய்து தண்ணீர் பாய்ச்சி விடலாம். தனியாகவே உழைத்தால் ஒரு மாதத்திற்குமேல் ஆகும். ஆகட்டுமே, நான் தனியாகவே உழைக்கிறேன். பத்தே மாதத்தில் இந்த மண்ணிலிருந்து பத்தாயிரம் ரூபாய் எடுக்கவில்லையானால் என் பெயர் அழகியநம்பியில்லை. இன்றைக்கு இந்தத் தொழிலில் பழக்கம் விட்டுப்போயிருக்க, லாம். என் முன்னோர்கள் தலைமுறை தலைமுற்ையர்க்ப்பரம்பரை ப்ரம்பரையாகச் செய்து வந்த அதேவேளாண் மைத் தொழிலை நானும் ஏன் செய்யக்கூடாது? ஏன் செய்ய முடியாது? அதே வேளாளன் இரத்தம்தானே என்.உடலிலும் ஒடுகிறது? அந்த இரத்தத்தின் சக்தியை இந்த நிலத்தில் 'உழைத்துக் காட்டுகிறேன்'-நிலத்தில் இறங்கி வேல்ை செய்யுமுன் அவன் தனக்குத் தானே இப்படி ஒரு பிரதிக்ஞை செய்து கொண்டான். .

அந்த நிலத்திலிருந்த கற்களை அப்புறப்ப்டுத்தவே முழு மையாக ஐந்து பகல்கள் அவன் தனியனாய் உழைத்தான். காலை ஒரு வாய் கஞ்சி குடித்துவிட்டு ஐந்து ம்ணிக்கு கருக் கிருட்டோடு வீட்டை விட்டுப் புறப்படுவான். பக்ல் சாப் பாட்டை வள்ளியம்மை வயலுக்குக் கொண்டுவந்து விடு வாள். கிராமத்துக்கு வந்த இருபத்தொன்றாவது நாள் காலையில் முதல் முதலாக அந்த நிலத்தில் ஏர்பூட்டினான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/285&oldid=597857" இலிருந்து மீள்விக்கப்பட்டது