பக்கம்:பிறந்த மண்.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 287

கரி மூட்டைக்காகத் தீமூட்டம் போடுவதற்கு அவர் போய்க் கொண்டிருக்கிறாரென்று அவன் நினைத்துக்கொண்டான்.

வழக்கமாக ஒன்றரை மாதம், இரண்டு மாதங்களுக் கொருமுறை அந்த வழியாக அவர் மலைக்குப் போவதுண்டு, இந்த முறை இதுவரை காணாத புதுமை அந்தப் படுகைப் பரப்பில் தெரிவதைக் கண்டு அவர் பிரமித்துப் போனார். அவரால் தன் கண்களையே நம்பமுடியவில்லை.கல்லும் முள் ளும் சிதறிக் கிடந்த மேடு பள்ளமான தரை வளமான காப் கறித் தோட்டமாக மாறியிருப்பதைப் பார்த்து வியந்தார்.

'அந்தக் கொழும்புப் பிள்ளையாண்டான் இராப்பகலாக உழைத்து மண்ணைப் பொன்னாக்கிவிட்டாருங்க....' என்று அவரோடு வந்திருந்த கூலியாட்களில் ஒருவன் கூறினான்.

சாம்பல் நிறத்தில் கொழுகொழு'வென்று வளர்ந்த முட்டைக்கோஸ் செடிகள், பூவும் பழமுமாகத் தக்காளிச் செடிகள், வளமாக வளர்ந்த சீமை வெங்காயம், கேரட், உருளைக்கிழங்கு,- எல்லாப் பயிர்களையும் பார்த்தபோது பன்னிர்ச் செல்வத்தின் மனத்தில் பேராசை எழுந்தது. மனத்தையும், கண்களையும் அடக்கமுடியாமல் நெடுந்துாரத் திற்கு நெடுந் தூரம் தெரியும் அந்தப் பசுமையைப் பார்த்துக் கொண்டே மேலே நடிந்துசெல்லத் தோன்றாது தயங்கி நின்றார் அவர். பரண் மேல் அழகியநம்பி நின்றுகொண்டி ருப்பதையும் அவர் கண்டார். மனத்திற்குள் ஏதோ ஒரு தீர்மானத்திற்கு வந்தவராக நின்றுகொண்டிருந்த வரப்பின் புல் தரையின்மேல் துண்டை விரித்துப்போட்டு உட்கார்ந் தார். அதோ பரண்மேல் நிற்கிறான் அந்தப் பையன்; போய் நான் கூப்பிடுகிறேனென்று கூப்பிட்டுக் கொண்டுவா’: -என்று தம் ஆட்களில் ஒருவனைத் துரத்தினார்.

அழகியநம்பி தக்காளிச் செடிகளுக்குக் கொத்தி விடுவ தற்காக அப்போதுதான் மண்வெட்டியை எடுத்துக்கொண்டு பரணிலிருந்து கீழே இறங்கி வந்துகொண்டிருந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/289&oldid=597868" இலிருந்து மீள்விக்கப்பட்டது