பக்கம்:பிறந்த மண்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காபார்த்தசாரதி - 27

"இங்கே ஒரு வாரமாக ஊரெல்லாம் ஒரே வெள்ளக் காடு. ஊரிலிருந்து நகர முடியவில்லை".-அழகியநம்பி அவ ருடைய இடிக்குரலுக்கு முன்னால் இரைந்து பதில் சொல்ல முடியாமல் மென்று விழுங்கினான். , ‘

அதற்கு மேல் பஸ் ஸ்டாண்டு போன்ற ஒரு பொது இடத்தில் நின்றுகொண்டு அவனைத் திட்டவோ இறைந்து கொள்ளவோ முடியாதென்ற காரணத்தினால் பேசாடில் முன்னால் நடந்தார் அவர். ஏதோ பெரிய குற்றத்தைச் செய்துவிட்டுப் பின்னால் தலைகுனிந்து கொண்டு போகிற வனைப் போலச் சென்றான். அழகிய நம்பி.

வீட்டில் அம்மாவுக்கு முன்னால் வைத்துக் கொண்டு தன்னை எப்புடிக் கோபித்துக் கொள்வார், எப்படி திட்டு வார்-என்பதை நடந்துகொண்டே கற்பனை செய்ய முயன்றான் அவன். பிரமநாயகம் முன்கோப சுபாவமுடை யவர் என்பதும் அவனுக்குத் தெரிந்தே இருந்தது. அவன் கற்பனை வீண் போகவில்லை. வீட்டிற்குள் நுழைந்ததும் தம்முடைய கோபத்தின் முழு உருவத்தையும் வெளிக் காட்டிச் சண்டையிடத் தொடங்கிவிட்டார். சண்டையேன். றால் அடிபிடிச் சண்டையல்ல, வாய்ச்சண்டைதான்.

'ஏண்டா, மனிதனுக்குச் சொன்னபடி நடந்துகாட்டத் தெரிய வேண்டாமா? வாக்கிலே. நாணயமில்லாவிட்டால் அவன் என்னடா மனிதன்?"-எள்று அவனைப் பதில் சொல்லவிடாமல் பொரிந்து தள்ளினார். -

"நீங்கள் அவனைக் கோபித்துக் கொள்வதில் பய னில்லை. ஊரிலிருந்து பத்து நாட்களாக யாரும் வெளியேற் முடியாமல் செய்துவிட்டது வெள்ளம். உங்க்லிடம் புறப் பட்டு வருவதாகச் சொல்லியிருந்த தேதியில் பிரயாணத் துக்குத் தயாராக எல்லா ஏற்பாடுகளையும் செய்துதான் வைத்திருந்தான். அவன்."- அழகியநம்பியின் தாயார், அவரைச் சமாதானப்படுத்துவதற்கு முயன்றாள்.

“எனக்கு வந்த ஆத்திரத்தில் நான் மட்டும் தனியாகக் கப்பல்ேறிப் போயிருப்பேன், கோபமும், கொதிப்பும், ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/29&oldid=596662" இலிருந்து மீள்விக்கப்பட்டது