பக்கம்:பிறந்த மண்.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீர். பார்த்தசாரதி 29t

வந்து கொண்டிருப்பதைப் பார்த்ததும் எதிர்கொண்டு ճմյr வேற்று, 'வாருங்கள்”-என்று கூறிப் புன்னகை செய்தான்.

"என்னப்பா; அழகியநம்பி பெரிய பண்ணைக்கு முதலாளியாக மாறிவிட்டாற் போல் இருக்கிறதே?-என்று புலவர் ஆறுமுகம் சிரித்துக்கொண்டே கேட்டார்.

'நீங்கள் சொல்வது தவறு! இன்றும்-நாளையும், என்றுமே தனிப்டெருமை எதுவும் இல்லை. எல்லாம் இந்த மண்ணின் பெருமை! இதோ பாய்கிறதே, இந்த அருவித் தண்ணிரின் பெருமை!' என்று விநயமாக அவர்களுக்கு அவன் பதில் சொன்னான்.

"அப்படிச் சொல்லிவிட முடியுமா அப்பா? ஊரெல்லாம் உன்னைக் கிறுக்கனாக நினைத்துக் கேலி செய்தபோது அலுக்காமல் சலிக்காமல் இந்த மண்ணில் நீதானே உழைத் தாய்?” - -

“எனக்கு நம்பிக்கை இருந்தது. வைராக்கியம் இருந் தது. உழைத்தேன்' என்று பெருமையாகச் சொன்னான். அவன். சிறிது நேரம் அவனோடு அளவளாவிக் கொண்' டிருந்துவிட்டு அவர்கள் போய்ச் சேர்ந்தார்கள்.

32. நல்வினைகள் ஒன்று கூடுகின்றன

காலம்தான் எவ்வளவு வேகமாக ஒடுகிறது? ஒரு மழைக்காலம், ஒரு கூதிர்காலம், ஒரு பின் பணிக்காலம், ஒரு முன் பனிக்காலம், ஓர் இளவேனிற்காலம், ஒரு முதுவேனிற் காலம்.ஆறு பெரும் பருவங்கள், ஒடும் சித்திரங்கள் போல் தோன்றி மறைந்துவிட்டன. அதற்கு மேலும் நான்கைந்து மாதங்கள் ஓடிவிட்டன. இந்தச் சிறிது காலத்திற்குள் அழகியநம்பியின் வாழ்வில்தான் எத்தனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/293&oldid=597879" இலிருந்து மீள்விக்கப்பட்டது