பக்கம்:பிறந்த மண்.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3&4. பிறந்த மண்

பிட்டுக் கொண்டு வரச் சொல்கிறேன். நாலு பெரியகிர். களையும் வைத்துக் கொண்டு இந்த நல்ல நேரத்திலேயே வெற்றிலை பாக்கு மாற்றி நிச்சயம் செய்துகொண்டு விடலாம்.”

தேவையானால் செய்துகொள்ளுங்கள்.நான் நிலத்துப் பக்கம் போகவேண்டும். எனக்கு வேல்ை இருக்கிறது"என்று சொல்லிவிட்டு அவர்களுடைய பதிலுக்குக் காத்துக் கொண்டிருக்காமல் கிளம்பி விட்டான் அவன். ...

மறுநாள் அழகியநம்பி எதிர்பாராத ஆச்சரியம் ஒன்று நடத்தது. . . .

  • சிரஞ்சீவி முருகேசனுக்கு உன் தங்கையைச் செய்து கொள்ளலாமென்று எங்களுக்கு ஒர் அபிப்பிராயம் இருக் கிறது! நீ சம்மதித்துப் பதில் எழுதினால் நாளையே எல்லாரும் பெண் பார்ப்பதற்குப் புறப்பட்டு வந்து போகி நாம்:- என்று முருகேசனின் தந்தை அவனுக்குக் கடிதம் எழுதியிருந்தார். அழகியநம்பி அளவற்ற மகிழ்ச்சி அடைந் தான். கடிதத்தை அம்மாவிடம் படித்துக் காண்பித்தான். சம்மதம்; பெண் பார்க்க வாருங்கள் என்று பதில் எழுதி. விடு."-ன்ன்று அவன் தாய் கூறினாள். அப்படியே முருகே சனின் தந்தைக்குப் பதிலும் எழுதிப் போட்டுவிட்டான்.

முருகேசன் ஏற்கெனவே வந்திருந்தபோது அழகிய நம்பியின் தங்கையைப் பார்த்திருந்தான். அவன் பெற்றோ ருக்கும் வள்ளியம்மையைப் பார்த்ததும் பிடித்துவிட்டது. அழகியநம்பியின் மேல் முருகேசனின் தந்தைக்கு ஒரு தனிப் பட்ட அபிமானம் இருந்தது. "நல்ல பிள்ளை. படித்திருக் இறோம் என்று தலைகனத்துப் போய்த் திரியாமல் சொத்த ஊரிலேயே வழி தெரிந்து வகையாக முன்னேறிவிட்டாள்" -என்று அவனைப் பற்றிப் பெருமையாக நினைத்துக் கோண்டிருந்தார் அவர். அதனால்தான் அழகியதம்பியின் குடும்பத்தோடு சம்பந்தம் செய்துகொள்ளவேண்டுமென்த் ஆசையே அவருக்கு உண்டாகியிருந்தது. சீர்சிறப்பு வகை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/296&oldid=597886" இலிருந்து மீள்விக்கப்பட்டது