பக்கம்:பிறந்த மண்.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தா. பார்த்தசாரதி 297

மனிதரைப் பார்த்தவுடன் அவனால் தன் கண்களையே நம்பமுடியவில்லை. சபாரத்தினம் தான் வந்திருந்தார். எவ்வளவு நாட்களுக்குப் பின் நினைவு வைத்துக்கொண்டு வந்திருக்கிறார். அப்படியே சிறு குழந்தை போல் திண்ணை மேல் தாவி அவரைக் கட்டித் தழுவிக்கொண்டான் அவன்.

"உங்களுக்குக் கலியாணம் என்பது எனக்குத் தெரியாது. நானும் என் வீட்டிலுள்ளவர்களும் யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்டு ஒன்றரை மாதத்திற்கு மேலாயிற்று. தென் னாட்டில் ஒவ்வொரு கோயில்களாகச் சுற்றிப் பார்த்துக் கொண்டே வருகிறோம். கன்னியாகுமரிக்குப் போய்விட்டுத் திரும்புகிற வழியில் உங்கள் நினைவு வந்தது. குறிஞ்சியூர்' என்று நீங்கள் சொல்லிய ஞாபகமிருந்ததினால் பார்த்து விட்டுப் போகலாமென்றுவந்தேன்'-என்று சொல்லிப் புன் முறுவல் பூத்தார். அவருடைய அந்தச் சிரிப்பை அவ்வளவு நாளுக்குப் பின் மறுபடியும் காண நேர்ந்த வியப்பில் மூழ்கிக் கொண்டிருந்தான் அழகிய நம்பி

நாராயணபிள்ளை முதலியவர்களுக்குச் சபாரத்தினத்தை அறிமுகப்படுத்தி வைத்தான். அவனைப் பார்த்துவிட்டு உடனே திரும்பும் நோக்கத்தோடு வந்திருந்த அவர், திரு மணத்திற்கும் இருந்துவிட்டுப் போக எண்ணினார். அழகிய நம்பியும் அவரை வற்புறுத்தினான். அவர் மேலும் இரண்டு மூன்று நாள் அங்கே தங்க இணங்கினார்.

அன்றுமாலை சபாரத்தினத்தையும் அழைத்துக்கொண்டு தன்னுடைய காய்கறிப் பண்ணையைச் சுற்றிக் காட்டுவ தற்குப் புறப்பட்டான் அழகியநம்பி.

சுற்றிலும் தெரிந்த் கருநீல மலைத் தொடர்களையும், வயல்வெளிகளையும், மற்ற இயற்கை வளங்களையும் பார்த்து மகிழ்ந்து கொண்டே, "அழகிய நம்பி! நீங்கள் கொடுத்து வைத்தவர். உங்கள் கிராமத்துக்கு ஈடாக தெய்வ லோகத்தைக் கூடச் சொல்ல முடியாது”-என்று பூரிப்ப்ோடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/299&oldid=597894" இலிருந்து மீள்விக்கப்பட்டது