பக்கம்:பிறந்த மண்.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீர். பார்த்தசாரதி - - 2*

“என்னைப் பொறுத்தவரையில் என்னுடைய இத்தக் கிராமத்திற்கும் கொழும்பிலிருந்து திரும்பி வந்து இறங்கிய விநாடியிலேயே அந்த இலட்சியப் பொறி பற்றிக் கொண்டு விட்டது. அதோ பாருங்கள்! உங்கள் கண் பார்வைக்குத் தென்படுகிற அந்தப் பசுமை முழுதும் நான் இந்த இரண்டு கைகளினால் உழைத்து உருவாக்கியபூமி"-என்று பெருமிதம் பொங்கும் குரலில் அவருக்குப் பண்ணையைக் காட்டினான், அழகியநம்பி - -

இருவரும் ஆற்றுப் படுகையில் ஏறி வயலுக்குள் நுழைத் தார்கள். தக்காளிச் செடிகளின் பக்கமாக அவர்கள் போதுக் கொண்டிருந்தார்கள். செடி தாங்காமல் நெருப்பு நிறத்தில் கொத்துக் கொத்தாகத் தக்காளிப் பழங்கள் தெரிந்தன.

"இந்தப் பழங்களுக்குத்தான் எவ்வளவு சிவப்பு இவ்வளவு சிவப்பான தக்காளிப் பழங்களை இலங்கையில் கூட நாள் பார்த்ததில்லை!"-என்றார் சபாரத் தினம்

"எப்படிப் பார்த்திருக்க முடியும்? இந்த மண்ணில் தான் சிந்திய ஒவ்வொரு துளி. இரத்தமும் அல்லவா இப்படிப்பழுத் திருக்கின்றன! நான் சிந்திய இரத்தத்தின் ஒவ்வொரு துணி யையும் இப்போது என்னைப் பெற்றெடுத்த மண் இப்படி 'எனக்குத் திருப்பிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது."-இந்த வார்த்தைகளைக் கூறும்போது அழகிப்தம்பிக்குக் கண்களில் நீர் துளிர்த்துவிட்டது

முற்றியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/301&oldid=597102" இலிருந்து மீள்விக்கப்பட்டது