பக்கம்:பிறந்த மண்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 29

பட்டார்கள். விடை கொடுக்கும்போது அவன் தாய்க்கு

அழுகையே வந்துவிட்டது.அவர்கள் இருவருடைய உருவமும் தெருக்கோடியில் திரும்புகின்ற வரை அம்மாவும், வள்ளியம் மையும் கல்ங்கிய கண்களோடு வீட்டு வாயிலில் நின்று பார்த்துக் கொண்டிருந்தனர். --- - .

பிரமநாயகத்தோடு நடந்து கொண்டிருந்த அழகியநம்பி

தெருக்கோடியில் காந்திமதி ஆச்சியின் இட்டிலிக்கடை வர் ததும் அதன் வாயிற் பக்கமாகத் திரும்பிப் பார்த்தால். யாரோ சொல்லி வைத்து ஏற்பாடு செய்ததுபோல அங்கே அந்தக் கண்கள் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தன. பகவதி நின்று கொண்டிருந்தாள். கோமுவின் தலையும் தெரிந்தது. அந்த நான்கு விழிகளைச் சந்தித்த அவனுடைய இரண்டு விழிகள் அவற்றில் ஏக்கத்தைக் கண்டன.

4. கப்பல் புறப்படுகிறது

அந்த நாட்களில் வியாபர்ரத்துக்காக அல்லது பணம் தேடுவதற்காக அக்கரைச்சீமை என்று செல்லமாக அழைக் கப்பட்ட இலங்கைக்குப் போவது எளிய செயலாகஇருந்தது. பாஸ்போர்ட், விசாமுதலிய தொல்லைகளெல்லாம் இல்லாத காலம் அது. துரத்துக்குடியிலிருந்து மதுரைக்கு இரயிலேறுவது போலவே கொழும்புக்குக் ஆப்பலேறுவதும் சாதாரணமாக இருந்து வந்தது. ஆனாலும், கடலைக் கடந்து போதல் என்ற எண்ணம் உணர்ச்சியளவில் ஒரு திகைப்பை உண்டாக்குவது வழக்கம். -

பிரமநாயகமும், அழகியநம்பியும் தாத்துக்குடிக்கு வந்து சேரும்போது மாலை நான்கு மணிக்கு மேல் ஆகியிருந்தது. பல்ளில் பிரயாணம் செய்த சில மணி நேரத்தில் அவர் பேசிய பேச்சுகளும், பழகிய விதமும், அந்த மனிதரைப்பற்றி ஓரளவு நன்றாகத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பை அவ லுக்கு அளித்திருந்தன. -- - >

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/31&oldid=596666" இலிருந்து மீள்விக்கப்பட்டது