32 - - பிறந்த மண்
பைக்குள் துழாவினான். சில்லறைக் காசுகளாக இருந்த வற்றை எண்ணிப் பார்த்ததில் மொத்தம் பன்னிரண்டே. முக்காலணா .ே த நி ய து. பிரமநாயகத்திடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு அப்படியே வெளிப்புறத்திலிருந்த ஒட்டலுக்குச் சென்று பசியைத் தணித்துக்கொண்டு வரலா மென்று தோன்றியது அவனுக்கு. அவரையும் உடன் அழைக் காமல் செல்வது நன்றாயிருக்குமோ என்று தயங்கினான்.
வாருங்கள்; சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டு வரலாம்என்று. தான் அவரை அழைத்தால் என்ன நினைத்துக் கொள்வாரோ என்று பயமாக இருந்தது. கோபித்துக் கொண்டு கூச்சல் போட்டால் என்ன செய்வது? *
கேவலம் பன்னிரண்டே முக்காலணாச் சில்லறைக்குச் சொந்தக்காரன் பன்னிரண்டு இலட்சத்துக்கு அதிபதியை உரிமையோடு காப்பி சாப்பிட அழைக்கலாமா? உயர்வு, தாழ்வு, மட்டுமரியாதை இல்லாமல் போய்விட்டதென்று அவர் திட்டுவாரோ என்னவோ?
கை வறண்டு சிடக்கும் ஏழைக்குத்தான் அடுத்த விநா டியைப்பற்றிக் கவலைப்படாமல் இந்த விநாடியில் இருப் பதைச் செலவழித்து விடவேண்டும் என்ற ஆசை உண்டா கிறது. பன்னிரண்டே முக்காலணாவில் இரண்டுபேர் காப்பி சிற்றுண்டி சாப்பிட்டு விடலாமென்று நான் நினைக்கிறேன். பன்னிரண்டு இலட்சத்துக்கு உரியவர் வயிற்றையும், பசியையும் பக்கத்திலிருப்பவனையும் மறந்து காரியத்தில் கண்ணாகச் சங்கச் சாவடியின் வாசலில் நின்றுகொண்டிருக் கிறார்-இதை நினைத்தபோது அழகியநம்பிக்குச் சிரிப்புத் தான் வந்தது. உதடுகளுக்கு அப்பால் வெளிப்பட்டு விடாமல் அந்தச் சிரிப்பை அடக்கிக்கொண்டு விட்டான்.
துறைமுகத்தில் சுறுசுறுப்பான நேரம் அது. ஐந்தேகால் மணிக்குக் கொழும்புக்குப் புறப்படவேண்டிய கப்பல் ஒரு புறமும், நாலரை மணிக்குக் கொழும்பிலிருந்து வந்த கப்பல் ஒருபுறமுமாக நின்றுகொண்டிருந்தன. ஏற்றுமதி, இறக்கு