பக்கம்:பிறந்த மண்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蜡 பிறந்த மண்

பிரமநாயகம் வரும்போதே அவசரப் படுத்திக்கொண்டு - அந்தார். 'தம்பி! நாழிகையாகிவிட்டது கப்பல் புறப்படு வதற்கு இன்னும் முக்கர்ல் மணிநேரம் தான் இருக்கிறது. வர் சாமான்களை ஆளுக்குக் கொஞ்சமாகத் தூக்கிக்கொள் வோம். உள்ளே சுங்கச் சோதனை முடில் தற்குக் கால் மணி நேரம் ஆகிவிடும்' -என்று சொல்லிக்கொண்டே வேகமாக வந்தார். பிரமநாயகத்தின் உண்மை உருவம் அழ்கிய நம்பிக் குப் புரிந்துவிட்டது. அவன் பெரிதும் ஏமாற்றமடைந்தான். அவன் பிடித்த கிளை?....அது பலக்குறைவான முருங்கைக் கிளை என்பது சந்தேகமறத் தெரிந்துவிட்டது. கணநேரத்து ஆத்திரத்தில் அப்படியே, சி? நீயும் ஒரு மனிதனா?- என்று கேட்டு விட்டுப் பிரமநாயகத்தின் முகத்கில் காறித் துப்ப வேண்டும் போல் தோன்றியது. துப்பிவிட்டு ஊருக்குத் திரும்பிப்போய் மூட்டை தூக்கியாவது பிழைக்கலாம்என்று எண்ணினான். தன்மானமும், மனக்கொதிப்பும், அப்படி எண்ணச்செய்தன அவனை. வெறும் எண்ணம்தான்! வெறும் கைத் துடிப்புத்தான். அடுத்த கணமே காரியவாதி யாக, தான் எச்சரிக்கை மிக்க சராசரி மனிதனாக மாறி னான் அழகியநம்பி. - - - - "எந்த முன்கோபம் என்ற குணத்தை நான் வெதுக்கி றேனோ. அதே முன்கோபம் என்ற குணத்துக்கு நானே ஆளாகிவிடலாமா? பிரமநாயகம் செய்தது கேவலமான செயல்தான்.ஆனால், நானும் என் எதிர்காலத்தில் ஒருபகுதி எந்த மனிதரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறோமோ, அ ரை இப்போதே பகைத்துக் கொள்வதில் பயன் இல்லை. பொறுமை எல்லாருக்கும் சாதாரணமாக வேண்டுமீ. ஆனால்

ழக்கு அது கட்டாயமாக வேண்டும்.... ...'

அழகியநம்பி பசியைப் பொறுத்துக்கொண்டான். பிரம நாயகம் அவனுக்குத் தெரியாதென்று நினைத்துக்கொண்டு செய்த குற்றத்தைப் பொறுத்துக் கொண்டான். எல்லாவற். றையும். பொறுத்துக்கொண்டு முட்டை முடிச்சுகணிச் சுமந்து அவுரை பின்பற்றிச் சுங்கச்சாவடிக்குள் நுழைந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/38&oldid=596680" இலிருந்து மீள்விக்கப்பட்டது