பக்கம்:பிறந்த மண்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 பிறந்தம்.ண்

பழகினான்? தங்கமான பையன், இரைந்து பேசப் பயப்படு வான். பெரியவர்களிடம் மட்டுமரியாதை உண்டு. அவ்வள வில்லையானால், வழியோடு போய்க் கொண்டிருந்தவன் கோமுவின் கூச்சலைக் கேட்டுக் குளத்தில் விழுந்த என் பெண்ணைக் காப்பாற்றுவானா? அதுதான் போகட்டும். கொழும்புக்குப் போகிறவன் என்ன பணிவாக வீடு தேடி வந்து என்னிடம் சொல்லிக்கொண்டு போகிறான்? விநய மான பிள்ளை, குணமுள்ள பிள்ளை, ஏழைக் குடும்பத்தின் பொறுப்பையும், கடன் சுமைகளையும் இந்த வயதிலேயே தாங்கிக்கொண்டு துன்பப்படும்படி நேர்ந்தது. எப்படியோ பிழைத்து முன்னுக்கு வரவேண்டும். நல்லவன்; எங்கே போனாலும் பிழைத்துக் கொள்வான்,-இது அழகிய நம்பியைப் பற்றிக் காந்திமதி ஆச்சியின் மனத்தில்

தோன்றிய நினைவு. - * ,

கோமு நினைத்தாள்:-"மாமா எவ்வளவு வேகமாகத் தண்ணிருக்குள் பாய்ந்தார்! எவ்வளவு அநாயாசமாக நீந்தி அக்காவைத் துரக்கிக் கரைக்குக்கொண்டு வந்தார்! அக்கா வைத் தூக்கிக் கரகமாடுவதுபோல் கரகரவென்று சுழற்றிக் குடித்திருந்த தண்ணிரையெல்லாம் வெளியேற்றியது எவ்வளவு சாமர்த்தியமான காரியம்? இட்லி சாப்பிடும் போது ஆச்சி! ஒரு காலத்தில் கொழும்பிலிருந்து நிறையச் சம்பாதித்துக் கொண்டு ஊர் திரும்பினால் உங்கள் பெண் கோமுவைத் தான் கட்டிக் கொள்ளப் போகிறேன்’ என்று அழகியநம்பி வேடிக்கைக்குச் சொன்ன வார்த்தைகள் கோமுவின் பிஞ்சு மனத்தில் அழிய முடியாத அல்லது அழிக்க முடியாத ஓர் இடத்தில் ஆழப் பதிந்துவிட்டன. அந்தச் சொற்கள் விளையாட்டுப் போக்கில் பொருள் வலுவின்றிக் கேலிக்காகச் சிரிப்பதற்காகக் கூறப்பட்டவை என்று அவள் நினைக்கவில்லை. உணர்ச்சி மலராத காரண காரியங்களைத் தொடர்பு படுத்திச் சிந்திக்கத் தெரியாதஅந்த இளம் உள்ளம் அந்தச் சொற்களில் எதையோ தேடத் தொடங்கியிருந்தது. - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/46&oldid=596696" இலிருந்து மீள்விக்கப்பட்டது