பக்கம்:பிறந்த மண்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 . பிறந்த மண்

பதிந்துவிட்டன.போயிருக்க வேண்டிய உயிரைக் காப்பாற்றி விட்டான். அவள் இப்போது இருக்கிறாள் என்றால் அவனால் இருக்கிறாள். அவனால் மட்டுமின்றி அவனுக் காகவும் இருக்கவேண்டுமென்று அவள் உள்ளம் சொல்லியது. களங்கமில்லாத அவள் கன்னி உள்ளத்தை அன்று காலை நிகழ்ந்த குளத்தங்கரைச் சம்பவத்திலிருந்து கவர்ந்து கொண்டவன் எவனோ அவன் கண்காணாத சீமைக்குக் கப்பலேறிப் போய்க் கொண்டிருக்கிறான். அதை நினைத்த போது அந்தப் பேதைப் பெண்ணின் உள்ளம் குமைந்தது.

அழகிய நம்பி திரும்புவதற்கு எத்தனை ஆண்டுகள் ஆகுமோ? அதுவரை அவள்-அவளுடைய மனம் -என்ன செய்ய முடியும்? கடவுள் எவ்வளவு நல்லவர்? எவ்வளவு தொலைவிற்கு அப்பால் எவர் இருந்தாலும் மற்றோர் இடத்தில் இருந்துகொண்டு மற்றொருவர்.அவரைப் பற்றி நினைப்பதற்கு மனம் என்ற ஒரு பொருளைக் கொடுத்திருக் கிறாரே பகவதிக்கும் அந்த மனம் இருக்கிறது! அது பெண்ணின் மனம் ஆயிற்றே அந்த நீண்ட இர்வுப் போதில் மட்டும் தானா? அவனைப் பார்க்கின்றவரை அவனுடைய சிரித்த முகத்தைக் காண்கின்றவரை அவனையே நினைத்துக் கொண்டிருப்பாள் அவள். இட்லிக் கடை காந்திமதி ஆச்சி, யின் பெண் என்பதற்காக உணர்ச்சி, உள்ளம், நம்பிக்கை, இவை அவளுக்கு இல்லாமல் போய்விடவில்லையே பகவதிக் குத் துர்க்கம் வரவில்லை. -

தாயும் தங்கையும் நன்றாகக் குறட்டைவிட்டுத் துரங்கத் தொடங்கியிருந்தார்கள். அவளுக்குத் தூக்கம் வரவில்லை. கண்ணும் மூடவில்லை. மனமும் மூடவில்லை. நினைவுகளும் மூடவில்லை. ஒரு பெரிய கப்பல், நீலக்கடலில் மிதக்கிறது: அதில் அழகியநம்பியின் உருவைக் கற்பனை செய்ய

முயன்றாள் அவள், ! - - - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/48&oldid=596700" இலிருந்து மீள்விக்கப்பட்டது