அணிந்துரை
பிறந்த மண் என்ற நெடுங்கதையைப் படித்து மகிழ்ந் தேன். கதைக் கோப்பு புதுமையாகவும் இயற்கை நலம்' மேவியதாகவும் அமைந்திக்க்கிறது. பாத்திரங்களின் இரண் டோர் அம்சங்களே சித்திரிக்கப் பெற்றுள்ளனவென்றாலும் அவர்கள் நம்முன் உயிர்த் தளிர்ப்புட்ன் நடமாடுகின்றன்ர்.
வாழ்க்கைத் துன்பங்களை மற்ப்பதற்காக இன்ப உலக மொன்றைப் படைத்துத் தரும் பொழுதுபோக்கு இலக்கிய மாகப் பிறந்த மண் உருப் பெறவில்லை. பகற் கனவிலோ உணர்ச்சி முனைப்பிலோ வடிவெடுத்த கதையைப் பொரு ளற்ற சொற்களை ஆளும் பொய்க்கால் நடையில் எடுத் துரைப்பதாகவும் அது அமையவில்லை. அனுபவத்தில் பண் பட்ட அறிவை அடிநிலமாகக் கொண்ட ஆசிரியனது மனோ பாவனையில் உதித்துத் திறமான புலமைக்குரிய தேர்ந்த சொற்களில் வெளியீடு பெறுகிறது. - -
அறவழி பிழையாது வாழ விழையும் அழகியநம்பி அடைகின்ற துன்பங்களை நாம் படிக்கும்போது, நமது மனம் விரிந்து இரக்க உணர்ச்சி வேரூன்றுகிறது: ஒரு சமயம் பரிவுக்கும், மற்றொரு சமயம் வெறுப்புக்கும் உரியவராக உருவாகும் பிரமநாயகம், மெய்யான பாத்திரப் படைப்பில் குறிப்பிடத்தக்க வெற்றியாகும். எவ்வாற்றாலும் பொருள் திரட்ட வேண்டுமென்ற மருளுக்கு இரையாகி, இயல்பாக அமைந்த நற்பண்புகளையும் இழந்து மன நிறைவையும் பறிகொடுத்து அல்லற்படும் எத்தனையோ மாந்தர்களை நினைவூட்டுகிறார் பிரமநாயகம்.
தாய்க்குல வேடத்திலும் ப்ேய்க்குலம் வாழ முடியுமென் பதைப் பூர்ணா புலப்படுத்துகிறாள். வியாபார யுகத்தின் தாடகை என்றே அவளைக் கூறலாம். ஆயினும், அக உலக ஒட்டங்களைத் துல்லியமாகப் புலப்படுத்துவதில் ஈடுபடும் ஆசிரியர், அவளை மட்டும் பிறர் கண்ணால் நோக்கச் செய்ததுடன் அமைந்துவிடுகிறார்.ஆசிரியர் பூர்ணாவர்கவே கற்பனையில் மாறி அவளது.ஆசாபாசங்களை நேரடியாகச் சித்திரிக்க முயன்றிருந்தால், ஊனமில்லாத பாத்திரமாக அவள் உருவாகியிருக்கக்கூடும்; இப்போது, ஏறத்தாழ ஒர் அச்சுப் பாத்திரமாகவே'அவள் தோன்றுகிறாள்.