பக்கம்:பிறந்த மண்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 பிறந்த மண்

இராணுவ இலாகாவில் பெரிய பதவி வகிப்பவர். லில்லி கல்லூரிப்படிப்பை முடித்துவிட்டு ஒர் அலுவலகத்தில் வேலை பார்க்கிறாள். மேரி இன்னும் படிப்பை முடித்த வில்லை. இராயல் கல்லூரியில் படித்துக் கொண்டிருக் கிறாள். கிறிஸ்துமஸ் விடுமுறையாக இந்தியாவைச் சுற்றிப் பார்க்க வந்தவர்கள் அப்போது ஊர் திரும்பிக் கொண் டிருந்தரர்கள்.இருவருக்கும் திருமணம் ஆகவில்லை-இவை தான் அவர்கள் கூறியவற்றிலிருந்து அவன் அறிந்து கொண்டவை. அவனுடைய பெயர் லில்லிக்குச் சரியாகச் சொல்ல வரவில்லை. மிஸ்டர் அலக்நம்பீ!-என்று சொல்லிச் சொல்லித் திணறிய அவள், ! உங்களை நான் முழுப்பெயரும் சொல்லிக் கூப்பிட முடியாது. எனக்குச் சொல்ல வரவில்லை, மன்னியுங்கள். நம்பி என்று மட்டுமே சொல்லிக் கூப்பிடுகிறேன்”-என்றாள். “உங்களுக்கு எப்படிச் சொல்ல வருகிறதோ, அப்படிச் சொல்லிக் கப்பிடலாம்’-என்று சிரித்துக் கொண்டே சொன்னான் அழகியநம்பி. .

இந்த சமயத்தில் சோர்ந்து படுத்துக்கொண்டிருந்த பிரமநாயகம் எழுந்து உட்கார்ந்தார். அவருடைய பார் வைக்கு முதன் முதலில் இலக்கானது கிராதியைப் பிடித்த வாறு நின்று பேசிக்கொண்டிருந்த அழகியநம்பியும், அந்தப் பெண்களும்தான். . .

அழகியநம்பியோ, அல்லது அந்தப் பெண்களோ, பிரம நாயகம் விழித்துக் கொண்டதையும், தங்களைப் பார்ப்பதை யும் கவனிக்கவில்லை. அவர்கள் பேச்சும் சிரிப்புமாகத் தங்களை மறந்திருந்தார்கள். இயல்பாகவே உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போதிலிருந்தே நல்ல உச்சரிப்போடு இனிய குரலில் சரளமான ஆங்கிலம் பேசப் பழகியிருந்தான் அழகியநம்பி. கல்லூரி நாட்களில் அந்தப் பழக்கம் நன்றாக்ப் பண்பட்டிருந்தது. அழகியநம்பியின் உயர்ந்த வளமான கட்டுடலும், இனிய முகமும் கவர்ச்சிகரமான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/52&oldid=596708" இலிருந்து மீள்விக்கப்பட்டது