பக்கம்:பிறந்த மண்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 'பிறந்த மண்'

எத்தன்ை நிறம் சிறிதும் பெரிதுன்ாக வானத்தை நோக்கித் கருத்திக்கொண்டிருக்குந் துணிகளைப் இபால் எத்தனை கிரேன்கள்’ (கப்பல்க்ளில் சாழரன்களை ஏற்றி, இறக்க உதவும் கருவிகள்) காட்சியளிக்கின்றன!

"பராக்குப் பார்த்துக் கொண்டே நடக்காதே; வேக .மாக வா! நேரமிருக்கும்போது ஒய்வாக இன்னொருநாள் ஊர்ைச் சுற்றிப் பார்த்துக் கொள்ளலாம்."-பிரமநாயகம் குரல் கொடுக்கவே தன்னுடைய ஆர்வம் நிறைந்த பார்வை யைத் துறைமுகத்தின் பக்கமிருந்து மீட்டுக் கொண்டு அவர் பின்னால் நடந்தான் அழகியநம்பி.

உடன் வருபவர்களைத் துட்டுச் செலவில்லாமல் நடத்தியே கூட்டிக் கொண்டு போய் விடுவதற்காகப் போகு மிடத்தின் தொலைவைச் சரிபாதியாகக் குறைத்துச் சொல்லிவிடுகிற சாமர்த்தியமான வழக்கம் சிலரிடம் டிண்டு. பிரமநாயகம் அதே வழக்கத்தைக் கடைப்பிடிக்கிறார் என அழகியநம்பிக்கு விளங்கிவிட்டது. நாலு புர்ல்ாங்குக்குமேல் நடந்தும் அவருடைய கடை வந்தபாடில்லை. -

அவர்களிருவரும் அப்போது நடந்து போய்க் கொண்டி

ருந்த விதியின் கலகலப்பையும், நெருக்கடியையும் பார்த்த போது அழகியநம்பிக்குத் தலை சுற்றியது; இருட்டறையி

லேயே நெடுநாட்களாக அடைபட்டுக் கிடந்தவுன் மின்சார

விளக்கொளிக்கு வந்தால் கண்கள் கூகமே அதுபோல, நீல

நிற மல்லச் சிகரங்களுக்கு நடுவே பள்ளத்தாக்கில் பசுமை

ஒவியம் போல் விளங்கும் அமைதி நிறைந்த அவனுடைய குறிஞ்சியூர்க் கிராம்த்தை நினைத்துப் பார்த்தான். பலநிற

'மனிதரும், பலவித மொழிக்குரல்களும், பலவிதக் கடை களும், ஒன்று சேர்ந்து விளங்கும் அந்தப் புதிய நகரத்தையும்

தினைத்துப் பார்த்தான். இரண்டு நினைவுகளும் ஒன்றோ போன்று ஒட்ட் மறுப்பதுபோல் தோன்றின. பிறந்த மில்னின் நினைவு ஒரு புறமும், புதிய மண்ணின் நினைவு ஒரு புறமும் தனித்தே நின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/62&oldid=596728" இலிருந்து மீள்விக்கப்பட்டது