பக்கம்:பிறந்த மண்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 63

வானொலிப் பெட்டிவரை எல்லாப் பொருள்களும் கிடைக் கும்படியான புரொவிஷன் ஸ்டோராக அதை நடத்தி வந்தார் பிரமநாயகம். பிரமநாயகம் புரொவிஷன் ஸ்டோர்ஸ்-என்று அவருடைய பெயரைத் தாங்கி நின்ற அந்தக்கடை ஒரு நாளைக்கு இருபத்தையாயிரம் ரூபாய் அளவுக்குக் குறையாமல் வியாப்ாரம் செய்தது. இளைஞர் களும் வயதானவர்களுமாக நாற்பது பேருக்குக் குறையாமல் அந்தக் கடையில் வேலை பார்த்தனர். - --

- பிரமநாயகத்தையும், அவர் பேச்சையும், பிரசித்தி பெற்ற அவருடைய கஞ்சத்தனத்தையும் பார்த்தவர்கள் அந்தப் பெரிய விற்பனை நிலையத்துக்கு அவர்தான் ஏகபோக உரிமையாளர் என்பதை நம்பமுடியாதுதான். .

அந்தக் கடைக்குள்ளே அழகியநம்பி பின் தொடர அவர் நுழைந்ததும் அங்கிருந்த அத்தனை வேலையாட்களும் அவரவரின் இருப்பிடத்திலிருந்து எழுந்து அடக்க ஒடுக்க மாக வணக்கம் செலுத்திய, காட்சி மறக்க முடியாதது.

'ஐயா ஊரிலிருந்து வந்துவிட்டார்கள்'- என்ற பப்பக்தியோடு கூடிய ஒடுங்கிய குரல் அந்தப் பெரிய கட்டடத்தில் மூலைக்கு மூலை எழுந்து பரவி அடங்கியதை அழகியநம்பி கவனித்தான். மரியாதை, பயம், அடக்க ஒடுக்கம் இவற்றை எல்லாம் பணத்தைச் சேர்த்து வைத்தி ருப்பவன் எவ்வளவ் சுலபமாக அனுபவிக்க முடியும் என்று அவன் அங்கே கண்டான். . . . .

பிரமநாயகம் . . ஒற்றைக்கட்டை. • தாத்துக்குடியில்

வியாபாரம் முறிந்த அதே வருடம் அவருடைய மனைவியும் ஒரு மாதம் நோயோடு போராடிவிட்டுப் போய்ச் சேர்ந் தாள். கடைகள் ஏலத்தில் பேர்ய் வியாபாரம் முறிந்த ஏக்கத்திலும், மனைவி இறந்த துக்கத்திலும் விரக்தியடைந் திருந்தபோதுதான் நாலைந்து வருடங்களுக்குமுன்அக்கரைச் சிமையும் அதன் வியாபாரமும் அவர்ை ஆசை காட்டி அழைத்தன. குழந்தை குட்டிகள், வீடு வாசல் என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/65&oldid=596734" இலிருந்து மீள்விக்கப்பட்டது