பக்கம்:பிறந்த மண்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

IᏴ tr . பார்த்தசாரதி 65

கடையின் பின்பகுதி விசாலமான வீடுபோல் அமைந் திருந்தது. பிரமநாயகம் அங்கேதான் குடியிருப்பு வைத்துக் கொண்டிருந்தார். சமையற்காரர், வேலையாள்-எல்லாம் நியமித்துக் கொண்டிருந்தார். குளிக்கக் குழாய், படுக்கை அறைகள், பூஜை செய்யவேண்டிய படங்களும் விக்கிரகங் களும் வைக்கப்பட்டிருந்த பூஜை அறை, ஒரே சமயத்தில் நாற்பது பேருக்கு உட்கார்ந்து சாப்பிடப் போதுமான கூடமும் சமையலறையும் எல்லாம் கடையின் பின்பகுதியி லேயே இருந்தன.

கூலி ஆட்கள் சாமான்களை எல்லாம் அந்தப் பகுதிக்குள் கொண்டுவந்து வைத்தனர். அவர்களுக்குக் கூலி கொடுக்க கால்மணி நேரம் செலவழித்தார் பிரமநாயகம். சிங்களவர் களான அந்த முரட்டுக் கூலிகள் தங்கள் மொழியிலும், கொச்சைத் தமிழிலும்ாகக் கூலி போதாதென்று கூச்சலிட் டனர். பிரமநாயகம் பதிலுக்குக் கூச்சல் போட்டார். ஒரனா, ரெண்டனா கூட்டிக் கொடுப்பதற்குப் பதிலாக வீண் கூச்சலை வளர்த்தார். கூலிகளும் விடாக்கண்டர் களாக இருந்தனர். கடைசியில் கால்மணி நேரத் தகரா றுக்குப் பின் அவர்கள் கேட்ட கூலியைக் கொடுத்தனுப் பினார், -

சமையல்காரன் இருவருக்கும் தேநீர் கொண்டுவந்து கொடுத்தான். அதைப் பருகிக்கொண்டே அந்தப் பகுதியை ஒரு கண்ணோட்டம் விட்டான் அழகியநம்பி. கடைக்குப் பின்னால் இது நம் வீடு மாதிரி. இங்கே எல்லா வசதிகளும் இருக்கின்றன. உனக்கு ஒர் அறை ஒழித்துத் தரச் சொல்கி றேன்’-என்றார் பிரமநாயகம். அப்போது அவருடைய முகபாவத்தை ஊன்றிக் கவனித்தான் அவன். வா உனக்கு எல்லாவற்றையும் சுற்றிக் காட்டுகிறேன். நாளை முதல் நீயும் இங்கு ஒரு முக்கியமான ஆளாகப்பழகவேண்டும் அல்லவா?’ என்று அவனை அழைத்துக் கொண்டு கிளம் பினார் அவர். -

பி-5,

5 :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/67&oldid=596738" இலிருந்து மீள்விக்கப்பட்டது