பக்கம்:பிறந்த மண்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 - பிறந்த மண்

'ஏ அப்பா சோமு! வந்திருக்கிறது யார் தெரியுமா? இந்தப் பிள்ளையாண்டான் எனக்குத் தூரத்து உறவுமுறை. நன்றாகப் படித்திருக்கிறான். நம் கடைக்கணக்கு வழக்கு களை எல்லாம் கவ்னித்துக் கொள்ளட்டும்’ என்று கூட்டிக் கொண்டு வந்திருக்கிறேன். வயிற்றுப் பாட்டுக்குக் குறைவில் லாமல் தம்பியைக் கவனித்துக் .ொள்ள வேண்டியது. உன் பொறுப்பு” என்று முதன் முதலில் சமையற்காரச் சோமு. வுக்கு அறிமுகம் செய்து வைத்தார். இதேவிதமான அறிமுகம் பிரமநாயகம் புரொவிஷன் ஸ்டோர்ஸில் உள்ள ஒவ்வோர் ஆளிடமும் தொடர்ந்தது. சலிப்போ அலுப்போ இல்லாமல் கடையின் ஒவ்வொரு மூலையையும் அவனைக் கூட்டிக் கொண்டு போய்க் காட்டினார். ஒவ்வொரு சிறிய விவரத் தையும் அவனுக்குக் கூறினார். விலகி நின்று பார்ப்பவர்கள், 'பிரமநாயகம் இந்தக் கடையை இந்தப் பையனிடம் ஒப்பு வித்து விட்டு எங்கேயாவது புறப்பட்டுப் போகப் போகி றாரோ? என்று நின்ைத்துக் கொள்ளத்தக்க விதத்தில் அவனை நடத்தினார். - அமைதியாக எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டும் எல்லாவற்றுக்கும் தலையாட்டிக் கொண்டும், அவசியம் நேர்ந்தபோது ஒரிரு வார்த்தைகள் பதில் சொல்லிக் கொண்டும் அவரைப் பின் தொடர்ந்தான் அவன் . - -

கடைசியாக கடையின் முன்புறத்தில் இருந்த ஒரு சிறிய அறை வாசலுக்கு அவனை அழைத்துக்கொண்டு வந்தார் பிரமநாயகம். அறையின் முகப்பு ஆடம்பரமாக அலங்கரிக் கப்பட்டிருந்தது. மெல்லிய மஞ்சள் நிற வாயில் திரை ச் சீலைகள் நிலையிலும் சன்னல்களிலும் தொங்கின. திரைச் சீலைக்கு முன்புறம் கையால் உட்புறம் தள்ளிக்கொண்டு நுழைவதற்கேற்ற இரண்டு சிறிய ஸ்பிரிங் கதவுகள் இருந் தன. அது பகல் நேரமாயிருந்தும் உட்புறம் மின்சார டியூப் விளக்குகள் எரிந்து கொண்டிருக்கும் ஒளி தெரிந்தது. மின் சார விசிறி வேகமாகச் சுழலும் ஒலியும் வெளியே கேட்டது. அறைக்குள்ளே உயர்ந்தரக ஊதுபத்திகளை நிறையக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/68&oldid=596740" இலிருந்து மீள்விக்கப்பட்டது