பிறந்த மண்
1. புதுவெள்ளம்
அழகியநம்பி மாடியின் உட்பகுதியிலிருந்து மொட்டை மாடிக்குச் செல்லும் மரப்படிகளில் வேகமாக ஏறினான். தடதடவென்று எழுந்த மரப்படிகளின் ஒசை மாடியெங்கும் அதிர்ந்தது.
அழகிய நம்பி மொட்டை மாடியின் திறந்த வெளியில் நின்றுகொண்டு சுற்றிலும் பார்வையைச் செலுத்தினான். தண்ணிர், தண்ணிர், ஒரே தண்ணிர் மயம்; நாலாபக்கங்களி லும் செந்நிறப் புதுநீர் பெருக்கெடுத்து ஒடிக்கொண்டிருந் தது. வயல்கள், வரப்புகள், சாலை, தோப்பு, துரவு-ஒரு இடம் மீதமில்லை! எங்கும் வெள்ளம்.
நான்கு புறமும் மலைத்தொடர்களுக்கு நடுவே பள்ளத் தாக்கில் அமைந்த சிற்றுார் அது. தாமரை இதழ் களுக்கு நடுவே இருக்கும் பொகுட்டைப் போல் மலைச் சிகரங்கள் ஊரை அரவணைத்துக் கொண்டிருந்தன.
சுற்றுப்புறத்து மவைத்தொடர்களிலும் பள்ளத் தாக்கி லும் ஒரு வாரமாக இடைவிடாத மழை, வானத்து மேகங் களுக்கு திடீரென்று கொடைவெறி பிடித்துவிட்டதோ என்று சொல்லத்தக்க விதத்தில் மழை அளவற்றுப் பெய் திருந்தது. அதன் விளைவுதான் ஊரையே திக்குமுக்காடச் செய்த இந்தப் புதுவெள்ளம். சாதாரண நாட்களிலேயே குளிருக்குக் கேட்க வேண்டாம், ஒருவாரமாகச் சூரியன் முகத்தையே காணமுடியாத நிலையில் கூண்டில் அடை