பக்கம்:பிறந்த மண்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 - பிறந்த மண்

அவர்கள் நின்று கொண்டிருந்த இடத்துக்கு மேலே சுவரில். தொங்கிய சிறிய சிவப்பு மின்சார பல்பு எரிந்து அனைத் தது. அதைப் பார்த்தவுடன், 'சரி வா உள்ளே போகலாம்” என்று ஸ்பிரிங் கதவை உட்புறமாகத் தள்ளிக் கொண்டு துழைந்தார் பிரமநாயகம். உள்ளே இருப்பவர் வெளியே இருப்பவரை வரச் சொல்வதற்கு அனுமதி அந்தச் சிவப்பு மணிவிளக்கு எரிவது என்று அழகிய நம்பி புரிந்துகொண் டான். அவற்றையெல்லாம் கண்டபோதும், அந்த அறைக் குள் நுழைந்தபோதும் மர்மம் நிறைந்த ஏதோ சில உண்மைகளைப் பார்ப்பதற்குப் போய்க் கொண்டிருப்பது போல் ஒருணர்வு அவனுக்கு ஏற்பட்டது. கேவலம், தனக்குக் கீழே தன்னிடம் மாதச் சம்பளம் வாங்கும் ஒரு ஸ்டோர்ஸ் செகரட்டரி'யிடம் பிரம்மநாயகம் இவ்வளவு தயக்கமும் பதற்றமும் அடைவானேன்? என்று சிரித்தான் அழகிய நம்பி. உள்ளே நுழைந்து பார்த்ததுமே அந்தச் சிந்தனைக்கு விடை கிடைத்து விட்டது. உள்ளே நாற்காலியில் உட்கார்த் திருந்த ஆளைப் ப்ார்த்தவுடன் அவன் வியப்படைந்தான்.

மெர்க்குரி விளக்கொளி, டைப்ரைட்டர், பைல் கட்டுகள், ஒர் அலுவலகத்திற்கு வேண்டிய பொருள்கள் பரப்பிய பெரிய மேஜை, இவற்றிற்கு நடுநாயகமாகக் கந்தர்வ லோகத்து மோகினிபோல் ஒரு சிங்களப் பெண் உட்கார்ந்து கொண்டிருந்தாள். அவளுக்கு முன்னால் மேஜைமேல் அன்றைய தபாவில் வந்த கடிதங்கள், விரித்து வைத்திருந்த செக் புத்தகம், ஊதுபத்தி ஸ்டாண்டு எல்லாம் இருந்தன.

அழகியநம்பி அருகில் சென்றதும். அந்தப் பெண்ணை அடையாளம் கண்டுகொண்டான். அவள் வேறு யாரு மில்லை, தெருக்கோடியில் அவன்மேல் மோதிக்கொள்ளாத குறையாக இடித்துக்கொண்டு வந்தவள்தான். அப்போது கண்கள் மறையும்படி கறுப்புநிறக் குளிர்ச்சிக் கண்ணா அலனிந்து கொண்டிருந்தாள். இப்போது, அதைக் கழற்றி மேஜைமேல் வைத்திருந்தால் அழகியநம்பிக்கு அவளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/70&oldid=596744" இலிருந்து மீள்விக்கப்பட்டது