பக்கம்:பிறந்த மண்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72. பிறந்த 66

எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் நான் இங்கே புறப்பட்டு வந்திருப்பது தெரியுமோ, தெரி யாதோ? குறிஞ்சியூரிலிருந்தால் தெரியும். எல்லாரும் வெளியூர் நண்பர்கள். கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது நெருங்கிப் பழகியவர்கள். படிப்பை நிறுத்தியதும் சில்ருடைய பழக்கமும் தொடர்பும் அடியோடு நின்று போயிற்று. முக்கியமான சில நண்பர்கள் மட்டும் பழக்கம் விட்டுப் டோகாமல் அவ்வப்போது குறிஞ்சியூருக்குக் கடிதம் எழுதிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் இனிமேலும் குறிஞ்சியூருக்குக் கடிதம் எழுதி ஏமாறாமலிருக்க, தான் கொழும்புக்கு வந்திருப்பதை அவர்களுக்குத் தெரிவித்து எழுதிவிட வேண்டியதுதான்-என்று எண்ணியது அவன் மனம். +

பிரமநாயகம் தனக்கு ஒழித்துவிட்டிருந்த அறைக்குள் சென்று அமர்ந்துகொண்டு, யார் யாருக்கு எந்த முறையில் எழுதலாம் என்று சிந்தனை செய்து கொண்டிருந்தான்.

கடிதம் எழுதவேண்டும்ென்று ஆசை, என்ன எழுதுவ தென்ற மலைப்பு - இப்படி ஓர் இரண்டுங்கெட்ட நிலையில் சிறிதுநேரம் அவனுடைய மனம் தவித்தது. அடுத்த அறை யில் பிரமிறாயகத்தின் குறட்டை ஒலி ஏற்ற இறக்கமான சுருதி லயங்களோடு ஒலித்துக் கொண்டிருந்தது. எவ்வளவு நேரம்தான் மலைத்துப் போய் அப்படியே உட்கார்ந் திருப்பது? மனத்தை உறுதிப்படுத்திக் கொண்டு அம்மா வுக்குக் கடித்ம் எழுதலானான். -

'அம்மாவுக்கு அழகியநம்பி அநேக வணக்கங்கள். இங்கு எல்லாரும் சுகம். அங்கு நீயும் வள்ளியம்மையம் சுகமாக இருக்கிறீர்களா என்பதற்குப் பதில் எதிர்ப்ார்க்கிறேன். நானும் பிரமநாயகம்அவர்களும் சுகமாக இங்கு வந்துசேர்ந் தோம். கடையில் இன்றுமுதல் வேலை பார்க்கப்போகிறேன். மற்றவர்கள் எப்படிப் பழகுகிறார்கள் என்பதைப்பற்றி இன் னும் இரண்டொரு நாட்கள் இங்கே ஊடாடிப்பழகின பின்பு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/74&oldid=596752" இலிருந்து மீள்விக்கப்பட்டது