பக்கம்:பிறந்த மண்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 . . i பிறந்த மண் பட்ட புறாக்களைப் போல மனிதர்கள் வீடுகளில் அடை பட்டுக் கிடந்தார்கள். அவ்வளவு குளிர். பக்கத்து ந்கரங் களிலிருந்து அந்தப் பள்ளத்தாக்கிற்கு வரும் போக்குவரவு சாதனங்கள் நின்றுபோய்ப் பத்து ந்ாட்களுக்கு மேலாயிற்று. சாலைகளெல்லாம் உடைப்பிற்கும் அரிப்பிற்கும் இலக்காகி யிருந்தால் போக்குவரவு எப்படி நடக்கமுடியும்? சகலவிதத் திலும் அந்தச் சின்னஞ் சிறிய கிராமம் உலகத்தின் பிற பகுதிகளோடு தொடர்பு பெறமுடியாத தீவைப் போலத் துண்டிக்சுப்பட்டிருந்தது. ஊருக்கு வரவேண்டிய தபால்கள் வரவில்லை. ஊரிலிருந்து வெளியிடங்களுக்குப் போக வேண்டிய தபால்கள் போகவில்லை. @ - -

மழை பெய்தவுடன் பருவகாலத்தில் வழக்கமாக நடை பெறவேண்டிய விவசாய வேலைகளும் தடைபட்டு நின்று. ப்ேர்யிருந்தன. உள்ளங்காலைப் பதிப்பதற்குக்கூட இடமில் லாமல் எல்லா இடங்களிலும் இடுப்புத் தண்ணிர் நிரம்பி யிருக்கும்போது என்னதான் செய்யமுடியும்? நாற்றங்கால் களில் நடுகைக்காகப் பயிரிட்டு வளர்த்திருந்த நாற்று, தண்ணிர்ப் பெருக்கினுள் அழுகிக் கொண்டிருந்தது.

அவ்வளவு தண்ணிரும் வற்றித் தரை கண்ணுக்குத் தெரிந்தாலும், பத்து நாள் வெயிலில் காய்ந்தாலன்றி உழவுக்கு ஏர் ஆட்ட முடியாது.

மண்ணில் புடைத்தெழுந்த கருநீலப் பசும்பந்துகளைப் போல ஊரைச் சுற்றிலும் தென்பட்ட மலைச் சிகர்ங்களை பும் அவற்றில் பால்வழிவது போல் படர்ந்திருக்கும் மேகச் சிதறல்களையும் பார்த்தபோது, அவன் இதயத்தில் ஏதோ ஒரு ப்ெரும் பாரம் தோன்றி அழுத்துவது போல் தோன்றி அது. விநாடிக்கு விநாடி அந்த உணர்வு பெரிதாக விசுவ ரூபமெடுத்தது. மணம் கனத்தது. உணர்வுகள் சுமை யாயின. - . . . .

கீழே, ஈரமும் பச்சைப் பாசியும் படிந்திருப்பதைக்கூடக் கவனிக்காமல் அப்படியே ம்ொட்டை மாடியின் தளத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/8&oldid=596620" இலிருந்து மீள்விக்கப்பட்டது