பக்கம்:பிறந்த மண்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 79.

மாகவும் நடந்துகொள்கின்றாயோ அவ்வளவு விரைவாக அவளை இங்கிருந்து கிளப்புவதற்கு ஏற்பாடு செய்துவிடு வேன் நான். பூர்ணாவைச் சாதாரணப் பெண்ணாக நினைத்துவிடாதே; ஒர் இராச தந்திரிக்குத் தேவையான குதுவாது, சூழ்ச்சிக்ளுக்கு மேல் அதிகமாகவே அவளுக்குப் பொருந்தியிருக்கின்றன. நீ அவளுக்கு இடையூறாக இங்கே வந்திருக்கிறாய் என்று தெரிந்தால் எதையும் செய்து உன்னை மடக்கப் பார்ப்பாள். கவனமாக நடந்துகொள்.'

ஒரு பெரிய கதையையே சொல்லி முடிக்கிறவர்போல அழகிய நம்பிக்கு இவ்வளவையும் சொல்லி முடித்தார் பிரம நாயகம். கேட்டுக்கொண்டு பெருமூச்சு விட்டான் அவன். கடிதங்களை எழுதித் தபாலில் சேர்ப்பதற்காக, சோமு விடம் கொடுத்துவிட்டுத் தானும் சிறிது நேர்ம் உடலைக் கீழே சாய்க்கலாம் என்று அவன் தன் அறையில் பாயை விரித்துப் படுத்திருந்தான். படுத்து இரண்டு மூன்று நிமிடங்கள் கூட ஆகியிருக்காது. அடுத்த அறையில் துரங்கிக் கொண்டிருந்த பிரமநாயகம் விழித்துக் கொண்டு விட்டார். குழாயடியில் போய் முகத்தைக் கழுவிக்கொண்டு நேரே அழகியநம்பியின் அறைக்கு வந்தார். அழகிய நம்பிக்குப் பகலில் தூங்கும் பழக்கம் கிடையாது. சும்மர் கண்களை மூடிக்கொண்டு உடல் அலுப்புத் தணிவதற்காகப் படுத்திருந்தான். காலடியோசை கேட்டதும் அறைக்குள் வருவது யார் என்று பார்ப்பதற்காகக் கண்களைத் திறந் தான். பிரம்நாயகம் வந்துகொண்டிருப்பதைப் பார்த்த, வுடன் மரியாதைக்காக எழுந்திருந்து நின்றான். துங்கு கிறாயா? உன்னிடம் சில முக்கியமான விஷயங்களை இப் போதே சொல்லிவிடலாம் என்று பார்த்தேன்”-என்றார்

'நான் தூங்கவில்லை. சும்மாதான் படுத்துக்கொண். டிருந்தேன்”-என்றான் அழகியநம்பி, 'அப்படியானால் இதோ ஒரு நிமிடம் பொறு! வந்துவிடுகிறேன்-என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/81&oldid=596766" இலிருந்து மீள்விக்கப்பட்டது