பக்கம்:பிறந்த மண்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 81

யில் புறப்படுவதற்குத் தயாரானான். சமையற்கார சோமு. சமையலறைக்குரியதாயிருந்த தன் தோற்றத்தை வெளியில் புறப்பட்டுச் செல்வதற்கு ஏற்றதாக மாற்றத் தொடங் கினான். படிய வாரிவிட்ட தலையையும் பளபளவென்று மினுக்கும் சில்க் அரைக்கைச் சட்டையும் சரிகை அங்கவஸ் திரமுமாகப் பத்தே நிமிஷத்தில் பணக்காரத் தோற்றத் தோடு அழகிய நம்பிக்கு முன்னால் வந்து நின்றான்.சோமு.

"அடேடே! யார் இது? சோமுதானா?-என்று கேலி யாகக் கேட்டான் அழகியநம்பி. அதைக்கேட்டுச் சிறிது வெட்கமடைந்ததுபோல் சிரித்துக் கொண்டான் சோமு. . அந்தச் சிரிப்பில் அசடு வழிந்தது. ,, . . . . ." -

"சரி. வா, போகலாம்”-என்று அவனைக் கூட்டிக் கொண்டு வெளியேறினான் அழகிய நம்பி, அவர்கள் பின் பகுதியிலிருந்து கடைக்குள் நுழைந்தபோது கட்ைவில் சரியான வியாபார நேரம். போக வழியே இல்லை என்று சொல்லுகிற அளவுக்கு ஆண்களும் பெண்களுமாக ஏகக் கூட்டம். மாலை நேரத்து வியாபாரம் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. ஒர் ஒரமாக வழியை விலக்கிக்கொண்டு அழகியநம்பியும் சோமுவும் வெளியே வந்தனர். அப்படி வரும்போது பூர்ணாவின் அறைக்குள் பிரமநாயகமும் அவளும் ஏதோ இரைந்து சப்தம் போட்டு விவாதித்துக் கொண்டிருப்பது அவன் செவிகளில் விழுந்தது. அதற்காக அவன் அந்த அறை வாசலில் தயங்கி நிற்கவில்லை. நடத்து வருகிறபோதே தானாகக் காதில் விழுந்ததை மட்டும் கேட்டுக் கொண்டு சென்றான். தெருவில் இறங்கி நடந்தனர் இருவரும். டவுன்பஸ் நிறுத்துமிடத்தில் போய்ப் பஸ்ஸிற்காகக் காத்துக் கொண்டு நின்றனர். தம்பி நாம் முதலில் மியூஸியத்தைப் போய்ப் பார்த்துவிட்டு அப்புறம் மிருகக் காட்சி சாலைக்குப் போகலாம். கடற் கரையைக் கடைசியாக வைத்துக் கொள்ளுவோம். அப்படி வைத்துக்கொண்டால்தான் கடற்கரையில் கால்மணி அரை

6- یا .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/83&oldid=596770" இலிருந்து மீள்விக்கப்பட்டது