பக்கம்:பிறந்த மண்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 பிறந்த மண் மணியாவது இருந்து காற்றுவாங்கிவிட்டு வரலாம்.” என்று சுற்றிப் பார்க்கும் திட்டத்தை விவரித்தான் சோமு -

"நான் ஊருக்குப் புதிய ஆள், எந்த இடம் எங்கே இருக்கிறது? எப்படி எப்படிப் போய்வரவேண்டும்? ஒரு விவரமும் எனக்குத் தெரியாது. நீ எப்படிச் சொல்லு கிறாயோ அப்படி நான் கேட்கத் தயார்”-என்று மொத்த மாகத் தன் சம்மதத்தையும் தன்னையும் சேர்த்து சோமு விடம் ஒப்படைத்தான் அழகியநம்பி. - • ‘

பஸ் வந்தது. இருவரும் ஏறிக்கொண்டனர். ஒடிக் கொண்டிருந்த பஸ்ஸில் உட்கார்ந்துகொண்டு அந்த அழகிய பெரிய நகரத்தின் வீதிகளைப் பார்த்தான் அழகியநம்பி. ஒளி, ஒலி, ஆரவாரங்கள், கண்ணைப் பறிக்கும் காட்சிகள், தெருவோரத்துக் கடைவீதிகள், ஆண்கள், பெண்கள் குழந்தைகள், பஸ்கள், கார், டிராம்-ரேடியோ சங்கீதத்தின் ஒலி-எல்லாம் நிறைந்த ஒரு புதிய உலகத்தின் நடுவே நகர்ந்து கொண்டிருந்தான் அவன். சிங்களப் பேச்சொலி ஆங்கிலப் பேச்சொலி-எல்லாம் தெரிந்தன; கேட்டன. பக்கத்தில் உட்கார்ந்துகொண்டிருந்த சோமு, இரு சிறகிலும் தெரிந்த-பெரியகட்டடங்கள், கடைகள், காட்சிகள் பற்றிய விளக்கத்தை ஆவலோடு கூறிக்கொண்டு வந்தான்.

பத்துநிமிஷ ஒட்டத்திற்குப் பின் முன்புறத்தில் பசும்புல் வெளிக்கும் நீருற்றுகளுக்கும் அப்பால் ஒரு பெரிய வெண்ணிற மாளிகைக்கு அருகில் இருந்த நிறுத்தத்தில் பஸ் நின்றது. தம்பி இறங்குவோம். இதுதான் மியூஸியம்'என்று முன்னால் இறங்கினான் சோமு. அழகியநம்பியும் இறங்கிறான். புல்வெளிக்கிடையே சென்ற சாலையில் இருவரும் நடந்தனர். இடுப்பில் பச்சைக் கட்டம் போட்ட கைலி வேஷ்டியும் முண்டா பனியனுமாக நான்கைந்து சிங்கள ஆட்கள் ஏதோ சினிமர்ப்பாட்டை முணுமுணுத்துக் கொண்டே எதிரே வந்தனர். அவர்களைக் கடந்து இருவரும் மேலே நடந்து சென்றனர். . . . . . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/84&oldid=596772" இலிருந்து மீள்விக்கப்பட்டது