பக்கம்:பிறந்த மண்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. கடன் தொல்லைகள்

வள்ளியம்மை! உன்னைத்தானே? வாசலில் யாரோ வ்ந்து கூப்பிடுகிறாற் போலிருக்கிறதே, போய் யாரென்று பார்த்துவிட்டு வா.-உள் வீட்டில் சமையற் காரியங்களை கவனித்துக்கொண்டிருந்த தாயார் மகளை வாசற்புறம் போய்ப் பார்த்துவிட்டு வரச்சொல்லி அனுப்பினாள்.

வாசலில் போய்ப் பார்த்துவிட்டுத் திரும்பி வந்த வள்ளி ய்ம்மையின் முகத்தில் பதற்றமும் திகைப்பும் தெரிந்தன.

"என்னடி பெண்ணே? வந்திருப்பது யார்?”

வட்டிக்கடைப் பன்னீர்ச்செல்வம் பிள்ளை வந்திருக் கிறார் அம்மா!' -

பெண் சொல்லிய பெயரைக் கேட்டதும் அந்த அம்மா ளுக்கு மனத்தில் திக்கென்றது. நெற்றி சுருங்கிக் கவலை யைக் காட்டும் மடிப்புகள் விழுந்தன.

"அவனிடம் என்ன பதில் சொல்லி அனுப்புவது?” தாயின் திகைப்பைப் புரிந்துகொள்ளாத பெண் அடுத்த கேள்வியைக் கேட்டாள்.

‘'நீ என்ன பதிலைப் போய்ச் சொல்லப் போகிறாய்? போ. உள்ளே அடுப்பைப் பார்த்துக்கொள். நான் ஏதாவது சாக்குப்போக்குச் சொல்லி அனுப்பிவிட்டு வருகிறேன்.”

பெண்ணை உள்ளே அனுப்பிவிட்டு வட்டிக்கடைக்கார ருக்குப்பதில் சொல்லி அனுப்புவதற்காக வாசலுக்கு வந்தாள் அந்த அம்மாள். - , -

வாசல் திண்ணையில் உட்கார்ந்து கொண்டிருந்த அந்த மனிதர் பன்னீர்ச்செல்வத்திற்குத் தப்பித் தவறிக்கூட மூகத்தில் சிரிப்போ, மலர்ச்சியோ, உண்டாகாது போலி ருந்தது. முகத்தில் அசாதாரணமானதொரு கடுகடுப்பு, சாதாரணமாகவே எந்த நேரத்திலும் அமைந்திருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/88&oldid=596780" இலிருந்து மீள்விக்கப்பட்டது