பக்கம்:பிறந்த மண்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி - $?

ஒருவேளை, வட்டிக்கடைக்காரர்களெல்லாரும் முகத்தை அப்படித்தான் வைத்துக் கொண்டிருக்க வேண்டுமென்று ஏதாவது இலக்கணம் இருக்கிறதோ, என்னவோ? இயற்கை யாகவே, பிறவியிலேயே புலிமுகத்தைப் போலப் பயங் காட்டும் முகம் வாய்த்திருந்தது அவருக்கு. அதில் அரிவாள் நுனிபோல் வளைந்த மீசையும் சேர்ந்துகொண்டது. வட்டி வசூல் செய்யும் மிடுக்குடன் உள்ளேயிருந்து வந்த அந்த அம்மாளை நிமிர்ந்து பார்த்தார் பன்னீர்ச்செல்வம். தோள் புடைவையை இழுத்துவிட்டுக் கொண்டே ஒடுங்கிப்போய்க் கதவோரமாக வந்து நின்ற அந்த அம்மாளுக்கு அவர் முகத் தைப் பார்ப்பதற்கே பயமாக இருந்தது.

"என்னம்மா? பிள்ளையைக் கொழும்புக்குக் கப்பலேற்றி அனுப்பியிருக்கிறீர்களாமே! போய்ப் பணம் ஏதாவது அனுப் பினானா? வட்டி தலைக்குமேல் ஏறிக்கொண்டே போகி றதே."-"முகத்தின் கடுகடுப்புக்குச் சிறிதும் குறைவில்லாத குரல். பேசும்போதே யாரையோ அதட்டுவது போலிருந்தது.

அவன் போய்ச் சேர்ந்தே இன்னும் முழுமையாக ஒரு வாரம்கூட ஆகவில்லையே! அதற்குள் எப்படிப் பணம் அனுப்புவான்? செளக்கியமாக வந்து சேர்ந்தேன்' என்று அவனிடமிருந்து ஒரு வரி கடுதாசிசுட வரவில்லையே?”

பன்னிர்ச் செல்வத்தின் குரலில் எவ்வளவு மிடுக்கும், கடுமையும் இருந்தனவோ, அவ்வளவு தணிவும் பணிவும், அந்த அம்மாளுடைய குரலில் இருந்தன. எங்கும்,எப்போதும் கையை உயர்த்தி ஒரு பொருளைக் கொடுத்தவர்கள் அதி காரம் செய்யலாம். அதட்டிப் பேசலாம், ஆட்சி செய்ய லாம். எதையும் செய்யமுடியும் அவர்களுக்கு. ஆனால், கையேந்தி வாங்கினவர்களும் அப்படி இருக்க முடியுமா?

'நானும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தாயிற்று.

இரண்டாயிரம் ரூபாய்க்கு நாலு வருட வட்டி ஐநூறு ரூபாய்க்கு மேல் ஆகிறது. இந்த நாலு வருடத்தில் ஒருதர

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/89&oldid=596782" இலிருந்து மீள்விக்கப்பட்டது