உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பிறந்த மண்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி j

உட்கார்ந்து கொண்டான். காலமும், கோடையும், தவறா மல் நீரைப் பொழிந்து ஊரின் கழுத்தில் பக்கத்துக்கு இரட்டை வடமாக மல்லிகை மாலையிட்டது போல இரண்டு பெரிய ஜீவநதிகளை அளிக்கும் அந்த மலை; வருடத்துக்கு மூன்று டிோகத்துக்குக் குறையாமல் போட்ட தைப் பொன்னாக்கிக் கொடுக்கும் அந்தப் பூமி, எப்பொழு தும் கோடைக்கானல், உதகமண்டலம் போலக் குளிர்ச்சியா யிருக்கும்.அந்த ஊர், மழைக்காக இருண்டு சூல் கொண்டி ருக்கும் வானம்- இவை யாவும் அப்போது அந்த விநாடியில் அவனைப் பார்த்துத் தங்களுக்குள் மர்மமாக-மெளன. மாகக் கேலி செய்வதுபோல் அவனுக்கு ஒருபிரமை உண்டா யிற்று. -

அவனுடைய அப்பன், பாட்டன், முப்பாட்டன்-எல் லாரும் வாழ்ந்து குப்பை கொட்டிக் கடைசியில் எந்த மண் னில் கலந்தார்களோ-அந்த மண்ணிலிருந்து அவன்; போசுப் போகிறான்.ஆம்! வெகுதூரத்திற்குப் போகிறான். கண்காணாத சீமைக்குப் போகிறான். மழை பெய்து ஊரை இப்படி வெள்ளக்காடு ஆக்கியிராவிட்டால் நான்கு" நாட்களுக்கு முன்னேயே அவன் துரத்துக்குடிக்குப் போய்க் கப்ப்லேறியிருப்பான். மழையும் வெள்ளமும், ஊரைவிட்டு வெளியேற முடியாதபடி பிரயாணத்தைத் தடை செய்து விட்டன. -

‘இன்னும் இரண்டு நாட்களிலேயாவது வெள்ளம் வடிந் தால்தான் ஊரைவிட்டுப் புறப்படலாம்! பிரமநாயகம் தூத்துக்குடியில் காத்துக் கொண்டிருப்பாரே. என்ன காரணத்தால் நான் வரவில்லை என்று தெரியாமல் என்னைத் திட்டிக் கொண்டிருக்கப் போகிறார். மனிதர் முன்கோபக்காரர் ஆயிற்றே. வெள்ளம் வடிந்ததும் புற்ப் பட்டு வந்துவிடுகிறேன். கோபித்துக் கொள்ளாதீர்கள்என்று ஒரு தபால் எழுதக்கூட வழியில்லாமலிருக்கிறதே வெள்ளத்தால் தபால் போக்குவர்வே நின்றுவிட்டதுே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/9&oldid=596622" இலிருந்து மீள்விக்கப்பட்டது