பக்கம்:பிறந்த மண்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 - - பிறந்த மண்

"என் பெண் வள்ளியம்மை. அழகியநம்பிக்கு இளை யவள்.' - .

பன்னீர்செல்வம் பெரிய மனிதர் அல்லவா? அதனால், யாரை இன்னார் என்று தெரிந்துகொண்டிருந்தாலும் தெரி யாததுபோல் கேட்கிற வழக்கம் அவரிடம் உண்டு. இந்தா, பெண்ணே! நாவறட்சியாய் இருக்கிறது. ஒரு டம்ளர் தண்ணிர் கொண்டுவா, குடிக்கவேண்டும்’-என்று உரிமை யோடு கட்டளையிட்டார் பன்னீர்செல்வம்.

வள்ளியம்மை உள்ளே ஓடினாள். தலைப்பின்னல் கரு நாகம்போல் அசைந்தாடத் தண்ணிர் கொண்டு வருவதற் காக அவள் ஒடிய காட்சியைப் பன்னீர்செல்வம் ஆவலோடு நோக்கினார்.

'உங்களுக்கு இந்த வயதில் கல்யாணத்திற்கு ஒருபெண் இருக்கிறதா? எனக்குத் தெரியவே தெரியாதே; யாரோ பக்கத்துவிட்டுப் பெண் என்று அல்லவா நினைத்தேன்?"அவர் பேச்சில் வியப்பு நடித்தது. -

"தெரியாமல் என்ன? நீங்கள் சிறு குழ்ந்தையில் இவளைப் பார்த்திருப்பீர்கள். இப்போது வயதாகிவிட்ட தனால் மதமதவென்று வளர்ந்திருக்கிறாள். அதனால் அடையாளம் தெரியவில்லை.”-அந்த அம்மாள் வேண்டா வெறுப்பாகப் பதில் கூறினாள். மனத்தில் சிறிதுஆத்திரமும் வருத்தமும் ஏற்பட்டிருந்தது. கடன் கேட்கவந்தால் கடனைக் கேட்டுவிட்டுப் போகவேண்டியதுதானே? இந்த விசாரணை எல்லாம் இவனுக்கென்ன வேண்டிக் கிடக் கிறது? -அந்த அம்மாள் மனத்துக்குள் அவரைப் பற்றி வெறுப்பாக நினைத்துக் கொண்டாள். கடன்பட்டுவிட்டால் கடன் கொடுத்தவனுடைய எல்லா அசட்டுத்தனங்களையும் ப்ொறுத்துக் கொண்டுதான் ஆகவேண்டியிருக்கிறது.

"நீ இப்படிக் கொடுத்துவிட்டுப் போ! நான் கொண்டு

போய் அவரிடம் கொடுக்கிறேன்.”-கதவுக்கு இந்தப்புறமே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/92&oldid=596788" இலிருந்து மீள்விக்கப்பட்டது