பக்கம்:பிறந்த மண்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. பார்த்தசாரதி. 91.

பெண்ணை வழிமறித்து நிறுத்திவிட்டு, தண்ணிர் செம்டை யும், டம்ளரையும் தன் கையில் தாங்கிக் கொண்டாள் அந்த அம்மாள். வள்ளியம்மை தாயின் முகக் குறிப்பைப் புரிந்து கொண்டு உடனே வேகமாகச் சமையலறைப் பக்கம் திரும்பிச் சென்றுவிட்டாள். அந்த அம்மாள் கதவுக்கு அப்பால் கடந்து செல்லாமல் நிலைப்படிக்கு உட்புறமிருந்து கொண்டே கைக்ளை எட்டி நீட்டி வாசல் திண்ணைமேல் தண்ணிர் செம்பையும் டம்ளரையும் வைத்தாள். -

"இதோ தண்ணீர் வைத்திருக்கிறேன். எடுத்துக்கொள் ளுங்கள்.”-பன்னீர்ச்செல்வத்திற்கு அவளுடைய அந்தச் செய்கை முகத்தில் அடித்த மாதிரி என்னவோ போல் இருந்தது. -

செம்பைக் கையிலெடுத்துத் தண்ணிர் குடித்தார்.அவர். 'தண்ணீர் போதுமா, இன்னும் கொண்டுவரச் சொல்லட் டுமா?"-நிலைப்படி கடவாமலே அந்த அம்மாளின் கேள்வி தொட்ர்ந்தது; 'போதும்'-அவர் ஒரே வார்த்தையில் பதில் கூறினார். ஆயிரம் கட்ன்பட்டிருக்கலாம். ஏழைமை யின் ஆழத்திலேயே, புதைந்திருக்கலாம். ஆனால், பணத் துக்குத்தானே கடன்பட்டிருக்கிறோம். மானம், மரியாதைக் காக அல்லவே?'-அந்த அன்னை துணிவான சிந்தனையில் இறங்கியிருந்தாள். தமிழ்நாட்டுக் குடும்பப் பெண்ணின் பண்பை அந்தச் சிறிய சந்தர்ப்பத்தில் பெரிய மனிதரான் பன்னீர்ச்செல்வத்திற்கு முன்னால் உறுதியாகக் கடைப் பிடித்துக் காட்டிவிட்டாள் அழகியநம்பியின் தாய்.

'பெண்ணுக்குக் கல்யாணம் எப்போது செய்யப்போகி lர்களோ? வயது ஆகிவிட்டிாற்போலத் தெரிகின்றதே??-- பன்னீர்ச்செல்வ்ம் வந்த காரியத்தை முடித்துக்கொண்டு. கிளம்புகிற வழியாகக் காணோம். திண்ணையில் பதிவாக உட்கார்ந்து, கையோடு கொண்டு வந்திருந்த வெற்றிலைப் பெட்டியைத் திறந்தவாறே அந்த அம்மாளிடம் பேச்சுக் கொடுத்தார்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/93&oldid=596790" இலிருந்து மீள்விக்கப்பட்டது